கணிதப் புதிர்கள்
1. 0 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி, கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ விடை 1 வரச்செய்ய இயலுமா?

2. 1997 1999 ? 2011 2017 2027
மேற்கண்ட வரிசையில் விடுபட்ட எண் எது, ஏன்?

3. ஆறு பூனைகள், ஆறு எலிகளைப் பிடிக்க ஆறு நிமிடங்கள் ஆகின்றன என்றால் 60 நிமிடத்தில், 60 எலிகளைப் பிடிக்க எத்தனை பூனைகள் தேவைப்படும்?

4. கடைக்குச் சென்ற ராமு சில பொருட்களை வாங்கினான். அந்தப் பொருட்களின் மொத்த விலை $70. ராமு இரண்டு $50 நோட்டுகளைக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, இரண்டு $100 நோட்டுக்களைத் தவறாகக் கொடுத்து விட்டான். அதைச் சரியாகக் கவனிக்காத கடைக்காரரும் மீதம் மூன்று $10 நோட்டுக்களைக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு மூன்று $50 நோட்டுக்களைக் கொடுத்து விட்டார். வீட்டிற்கு வந்தபின்பு தான் ராமுவுக்கு நடந்த விஷயம் புரிந்தது. இதனால் ராமுவுக்குக் கிடைத்தது நஷ்டமா, லாபமா? அது எவ்வளவு?

5. ஐந்து ஒன்பதுகளைப் பயன்படுத்தி கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ 10 விடையாக வரச் செய்ய வேண்டும். இயலுமா?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com