விடைகள்1. ஒவ்வொரு எண்ணும் இரண்டு மற்றும் அதன் மடங்குகளில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 1, 3 (1 + 2), 7 (3 + 4), 15 (7 + 8). ஆக, வரிசையில் அடுத்து வர வேண்டியது 15 + 16 = 31.
2. முதலில் 1, 2, 3 என்ற பந்துகளை தராசின் இடப்புறத்திலும் 4, 5, 6 என்ற பந்துகளை தராசின் வலப்புறத்திலும் வைக்க வேண்டும். இரண்டும் சமமாக இல்லை என்றால் எது சமமாக இல்லையோ அந்தத் தட்டிலிருந்த பந்துகளில் இரண்டை தராசின் இரு தட்டுக்களிலும் வைக்க வேண்டும். அவை சமம் என்றால் எஞ்சி இருப்பது அதிக எடை உடையது. சமமில்லை என்றால் எந்தத் தட்டு தாழ்ந்திருக்கிறதோ அதுவே எடை அதிகமானது.
அதுபோல 1, 2, 3 - 4, 5, 6 பந்துகள் வைத்த தட்டில் இரண்டுமே சமாக இருந்தால் 7, 8ல் ஏதோ ஒன்று தான் எடை அதிகமானது. அதனை இரண்டாவது முறை தராசைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துவிட இயலும்.
3. அந்த யானை வட்டப்பாதையில் செல்கிறது!
4. இதற்கு n x n - 1 / 2 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
மாணவர்களின் எண்ணிக்கை n = 30
= 30 x 29 / 2 = 435
ஆக மொத்தம் 435 கை குலுக்கல்கள் அங்கே நிகழ்ந்திருக்கும்.
5. குழந்தைகள் = x என்க.
சாக்லெட்டுகள் = y என்க.
y = x(5) + 7;
y = x(6) - 7 எனவே
6x - 7 = 5x + 7
6x - 5x = 7 + 7 = 14
x = 14
y = x(5) + 7
y = 14(5) + 7 = 77
எனவே குழந்தைகள் = 14
சாக்லெட்டுகள் = 77