கணிதப்புதிர்கள்
1. 1, 3, 7, 15, ...... என்ற தொடரில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

2. ராமுவிடம் எட்டுப் பந்துகள் உள்ளன. அவற்றில் ஒன்றின் எடை மற்றவற்றைவிட அதிகம். தராசை இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தி எடை அதிகம் உள்ள பந்தைக் கண்டு பிடிக்க முடியுமா?

3. ஒரு யானைக்கு முன்னாலும் பின்னாலும் நான்கு யானைகள் செல்கின்றன. நடுவில் அந்த யானை இருக்கின்றது. மொத்தம் இருப்பது ஐந்து யானைகள்தாம். எப்படி?

4. ஒரு கல்லூரி விழாவில் 30 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அங்கிருந்த ஒவ்வொருவருடனும் கைகுலுக்கினர். அங்கே எத்தனை கைகுலுக்கல்கள் நடந்திருக்கும்?

5. ஒரு பள்ளியில் இருந்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் 5 சாக்லெட் வீதம் கொடுத்தபின் 7 சாக்லெட்டுகள் மிஞ்சின. 6 வீதம் கொடுத்தால் 7 சாக்லெட்டுகள் பற்றாக்குறை ஆனது. அங்கிருந்த சாக்லெட்டுகள் எத்தனை, குழந்தைகள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com