Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
வார்த்தை சிறகினிலே
தி.மு.க அரசுக்கு காங்கிரஸ் உறுப்பினர் கள் 'ஜால்ரா'
- கேடிஸ்ரீ|மே 2007|
Share:
Click Here Enlargeதி.மு.க அரசுக்கு காங்கிரஸ் உறுப்பினர் கள் 'ஜால்ரா' போடுவதாகக் கூறுகின்றனர். ஜால்ரா அடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச கலர் டிவி, நிலமற்றவர்களுக்கு இலவசமாக இரண்டு ஏக்கர் நிலம் போன்ற பல நல்ல திட்டங்களை வழங்கும் இந்த அரசுக்கு நன்றாக 'ஜால்ரா' போடலாம். தவறு எதுவும் இல்லை. தொடர்ந்து 'ஜால்ரா' போடுவதிலும், 'ஜிங்ஜாங்' போடுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தண்டபாணி, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், பேசியதிலிருந்து...

*****

சில நாடுகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் வராதா என நினைக் கின்றன. ஆனால் உண்மையில் இந்தியா வும், சீனாவும் வர்த்தகம், பொருளாதாரம், தொழில் உள்ளிட்ட துறையில் கூட்டுற வாகச் செயல்படவே விரும்புகின்றன. வருங்காலங்களில் இருநாட்டு மக்களி டையே கருத்துப்பரிமாற்றங்கள் ஏற்பட்டு உறவு பலப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

ப. சிதம்பரம், மத்திய நிதியமைச்சர், சீனாவில் ஷென்ஜென் நகரில் பாங்க் ஆப் இந்தியாவின் முழுமை பெற்ற கிளையைத் திறந்து வைத்துப் பேசியது...

*****

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இசை என்றால் அவர்களின் வரம்புக்குள் கர்நாடக இசையும் இந்துஸ்தானியும்தான் இருக்கிறது. இசை என்பது உலகம் பூராகவும் இருக்கின்ற ஒன்று. இவற்றையெல்லாம் இசையென்று நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த ரசனை இல்லாதவர்களெல்லாம் இசை ரசனையே இல்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்.

சாருநிவேதிதா, எழுத்தாளர், பத்திரிகைப் பேட்டி ஒன்றில்...

*****
நான் முழுமையா, முத்தழகியா உணர ஆரம்பிச்சது படம் முடிஞ்சு டப்பிங் பேசறப்போதான். இந்த உணர்வு மறைய இன்னும் கொஞ்சம் நாளாகலாம். ஆனா இந்த அருமையான வாய்ப்புக் கிடச்சதுக்கு கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல் லணும். ஏன்னா, இப்ப வர்ற சினிமாக் கள்ல, ஹீரோயினுக்கு நடிக்க வாய்ப்புக் கிடைக் கிறதே ரொம்பக் குறைவு, ஆனா என்னை நிரூபிக்க, இந்தப் படம் எனக்குக் கிடைத்த வரம்..

ப்ரியாமணி, 'பருத்தி வீரன்' பட நாயகி, ஒரு பேட்டியில்...

*****

'கரையெல்லாம் செண்பகப்பூ' திரைப் படத்துக்கு எனக்குக் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள வாசகர்கள் ஆவலாக இருக்கலாம். அந்தக் காலங்களில் எல்லாமே வாய்வார்த்தை தான். 'நீங்க போங்க, பின்னாலயே ஒரு செக் அனுப்புகிறேன்' என்பார்கள். அனுப்பிய செக்கை அடுத்த வெள்ளிக் கிழமை போடுங்கள் என்பார்கள். சிலர் டோக்கன் அமவுண்ட் கொடுப்பார்கள். குறிப்பாக இந்த நாவலுக்கு ஒரே ஒரு தயாரிப்பாளர் ஐயாயிரம் ரூபாய் தந்தார். இதில் செய்தி என்ன வென்றால் படத்தை அவர் எடுக்காததால் போன் பண்ணி, கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டார். வங்கியில் அந்த செக் மாறினதுக்கு பத்து ரூபாய் சார்ஜ் செய்தார்கள். எனவே க.செ.பூ. திரைப் படமாக வந்ததற்கு நான் பத்து ரூபாய் செலவு செய்தேன்.

சுஜாதா, எழுத்தாளர், பத்திரிகைப் பேட்டி ஒன்றில்...

*****

குருவாயூர் கோவிலுக்குள் தனிப்பட்ட முறையில் என்னை மட்டும் அனுமதிக்க வேண்டாம், குருவாயூரப்பன் மீது நம்பிக்கை உள்ள எல்லா சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களையும் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் கோவிலுக்குள் முதல் ஆளாக இல்லாமல், என்னைப் போன்று கோவிலுக்குச் செல்லக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களும் உள்ளே சென்ற பின், கடைசி ஆளாகச் சென்றுதான் தரிசிப்பேன். குருவாயூரப்பன் சன்னதியில் நின்று பாட வேண்டும் என ஆவலுடன் இருக்கிறேன்.

பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் பேட்டி ஒன்றில் கூறியதிலிருந்து...

கேடிஸ்ரீ
Share: 




© Copyright 2020 Tamilonline