வார்த்தைகளை கண்டுபித்துவிட்டீர்களா...
நல்லது. விடைகளை பார்க்க
கடல், மண், சுவர், புல், சுவை, வரிசை, கண், கலை, புடவை.
உங்களுக்குத் தெரியுமென்றால் 'புரிசை' போன்ற இன்னும் கடினமான சொற்கள் கூடக் கிடைக்கும்! புரிசை என்றால் என்ன தெரியுமா? கோட்டைச் சுவர் (wall of a fort).
மற்றொரு சொல் 'கவரி'. இதற்குப் பொருள் நான் சொல்ல மாட்டேன். நீங்களே வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
நான்கு ஐந்து எழுத்துக்கள் உள்ள சொற்களும் இவற்றில் ஒளிந்துகொண்டு உள்ளன. உதாரணம்: வண்டல்மண்.
(ஓர் எழுத்தை ஒரு சொல்லில் ஒரே முறைதான் பயன்படுத்தலாம் என்று யாரும் சொல்லவில்லையே!)
தமிழை அறிவதுதான் எத்தனை கொண்டாட்டம்!
நளினிசம்பத்குமார்.