அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு
|
|
|
|
குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிட்டி (GOD) பே ஏரியா நாமத்வார்நடத்திவரும் மதுர உத்சவங்களின் வரிசையில் இவ்வாண்டு நவம்பர் முதல் ஜனவரிவரை நடக்கவுள்ள நிகழ்ச்சிகளின் சிறப்பு என்னவென்றால் பள்ளிவயதுச் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு பாடல்கள், பகவானின் புறப்பாடு போன்ற பகவத் கைங்கரியங்களைச் செய்வதாகும். இவை மதுரகீதம் மஹாயக்ஞம் என்னும் தலைப்பில் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் உத்சவம் தவிர குருஜியின் கீர்த்தனங்களில் 700க்கும் மேலான கீர்த்தனங்களைக் குழந்தைகள் பாடப் போகின்றனர். இந்த வரிசையில் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் பிரதான சீடர்களில் ஒருவரான பூஜ்யஸ்ரீ ராமாநுஜம்ஜி அவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் உத்சவங்களை நடத்துவார். இவற்றில் பக்தியோகம் போன்ற சொற்பொழிவுகளையும் நடத்துவார். விவரம் கீழ்வருமாறு:
டிசம்பர் 1-7: பாஸ்டன் ஸ்ரீ குருஸ்தான் சாய் கோவில் (107, ஓடிஸ் ஸ்ட்ரீட், நார்த்பரோ) நந்தோத்ஸவம், பாகவத பாராயணம் மற்றும் அன்னக்கூடோத்சவம் போன்றவை நடைபெறும். டிசம்பர் 8-14 வர்ஜினியா கிளென் ஆலன் நாமத்வார் (4902, ஹிக்கரி மேடொஸ் கோர்ட், கிளென் ஆலன்) இங்கே நிகுஞ்சோத்சவம் அன்னக்கூடோத்சவம் போன்றவை நடைபெறும். டிசம்பர் 22-24: மின்னியாபொலிஸ் ஹிந்து டெம்பிள் ஆப் மின்னசோட்டா, இங்கே சம்பிரதாய பஜனையுடன் ராதாகல்யாண மஹோத்சவம் நடைபெறும். டிசம்பர் 24-30: பேர்லண்ட், ஹூஸ்டன் நாமத்வார் (3642 பெய்லி அவென்யூ, மன்வெல், டெக்சஸ்) மதுரோத்சவம் நடைபெறும்.
இதுதவிர 'பக்தி சுகந்தம்' என்னும் நிதி திரட்டும் நாட்டிய நிகழ்ச்சி பேர்லண்ட் ஹூஸ்டனில் உள்ள நெல்சன் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. இது பாகவத புராணத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் கீர்த்தனங்களையும் பாகவத ஸ்லோகங்களையும் கொண்டு பக்தியின் பெருமையை பரதநாட்டியம் மூலம் எடுத்துரைக்கின்றனர். இதில் அமெரிக்கா முழுவதும் உள்ள பல்வேறு நாட்டியப் பள்ளிகள் பங்கேற்கின்றன.
GOD USA அமைப்பு சாந்தீபனி குருகுலம் வேதபாடசாலைகளை பல ஊர்களில் நடத்திவருகிறது. இந்த வேதபாடசாலைகளுக்கு ஆதரவு தர விரும்புவோர் தொடர்புகொள்ள
தொலைபேசி: 18304GODUSA வலைமனை: www.godivinity.org |
|
ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த், ப்ளெசன்டன், கலிஃபோர்னியா |
|
|
More
அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு
|
|
|
|
|
|
|