கொலம்பஸ் தமிழ்ப் பள்ளி கலந்துரையாடல் பரதநாட்டியம்: சுவாதி ரமேஷ் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா சிகாகோ: பாபநாசம் சிவன் இசைவிழா நியூ மெக்ஸிகோ: சித்திரைத் திருவிழா ஈஸ்வர் நாட்யாலயா ஆண்டுவிழா கனெக்டிகட்: ஷாந்தலா புல்லாங்குழல் இசை நாதலயா: கலை நிகழ்ச்சி இர்விங்: பங்குனிஉத்திர விழா ஆண்டுவிழா: லட்சுமி தமிழ் பயிலும் மையம் நெவார்க்: ஹனுமான் கோவில் ஆண்டுவிழா மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி பிக்னிக் சிகாகோ: பரதம் நாட்டியப் பள்ளி ஆண்டுவிழா டாலஸ்: வசந்தகால பிக்னிக் தி ஐடியல் கிட்ஸ் 2015 மிசௌரி தமிழ்ப்பள்ளி: தமிழ்த்தேனீ போட்டிகள்
|
|
லாஸ் ஏஞ்சலஸ் இந்தியன் மியூசிக் அகாதமி துவக்கம் |
|
- பிரசன்னா|மே 2015| |
|
|
|
|
|
ஏப்ரல் 12, 2015 அன்று இசை, கலை, பண்பாட்டு ஆர்வலர்கள் பிரசன்னா மற்றும் முகுந்த் ஆகியோரின் முயற்சியால் லாஸ் ஏஞ்சலஸ் இந்தியன் மியூசிக் அகாதமி உருவாகியுள்ளது. இது லாப நோக்கின்றி, இசை, கலை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் சேவாதளமாகச் செயல்படும். மாலிபு இந்துக் கோயில் அறக்கட்டளையினர் இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வுக்கு ஆலயத்தில் இடம் தந்துதவினர்.
பிரசன்னா வரவேற்புரை நிகழ்த்த, இசையறிஞர்கள் முரளி கிருஷ்ணா, ரோஸ் முரளி கிருஷ்ணா தம்பதியினரின் மாணவி மருத்துவர் அம்ருதவர்ஷணி கடவுள் வாழ்த்து பாடினார். ரோஸ்-முரளி கிருஷ்ணா, இந்து-வரதன், ஆர்த்தி-மீனா, மீனா கடப்பா மற்றும் நாராயண பல்லவுர் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். ஆலய அர்ச்சகர்கள் நரசிம்மாசாரி பட்டர், கிருஷ்ணமாசாரி பட்டர் ஆகியோரின் மறையோதலுடன் நிகழ்ச்சி துவங்கியது.
துவக்க நிகழ்ச்சியாக மல்லாடி சகோதரர்கள் ஸ்ரீராம் பிரசாத் மற்றும் ரவிகுமார் இசைக்கச்சேரி நிகழ்த்தினர். எம்பார் கண்ணன் வயலினிலும், நெய்வேலி நாராயணன் மிருதங்கத்திலும் துணையாக இருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் டாக்டர் இந்து வரதன் கலைஞர்களை கௌரவித்தார். முகுந்த் நன்றி கூறினார்.
அடுத்த நிகழ்ச்சியாக மே 10 அன்று மாலிபு இந்துக் கோயிலில் டாக்டர் சௌம்யா கர்நாடக இசை வழங்கவுள்ளார். எம்பார் கண்ணன், நெய்வேலி நாராயணன் பக்கம் வாசிப்பர் |
|
பிரசன்னா, லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா |
|
|
More