Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | முன்னோடி | ஹரிமொழி | கவிதைபந்தல் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
பொது
பால புரஸ்கார் விருது
சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
கோணங்கிக்கு கி.ரா. இலக்கிய விருது
DMV Rhythms இசைக்குழு
- செய்திக்குறிப்பிலிருந்து|அக்டோபர் 2021|
Share:
வாஷிங்டன் பெருநகர் பகுதியைச் சேர்ந்த DMV Rhythms இசைக்குழு கடந்த அக்டோபரிலிருந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் இணையம் வழியே இசைநிகழ்ச்சி நடத்தி வருகிறது. முதல் நிகழ்ச்சியாக SPB அவர்களின் நினைவாக தொடங்கிய இசைநிகழ்ச்சி, பின்னர் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தலைப்பில் நடந்தேறியது. மூன்று மணி நேரம் போனதே தெரியாமல் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திறமையான பல பாடகர்கள் விதவிதமான பாடல்களைப் பாடி மகிழ்விப்பார்கள்.

நிகழ்ச்சிகளை அமெரிக்கத் தமிழ் வானொலியைச் (American Tamil Radio) சேர்ந்த திரு. ரூபன் ஜகந்நாதன் அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறார். 12வது நிகழ்ச்சியாக SPB அவர்களின் மறைந்த தினத்தை ஒட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலியாக கடந்த செப்டம்பர் 26, 2021 அன்று நடைபெற்றது.

DMV Rhythms நிறுவனரான திரு. பாலாஜி ஸ்ரீனிவாசன் பாடகர்களையம் நேயர்களையும் வாழ்த்திப் பேசுகையில் இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து இணையம் வழியே மக்களின் பேராதரவுடன் நடைபெறும் என்று தெரிவித்தார். DMV Rhythms நடத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் youtube.com/c/dmvrhythms என்ற சுட்டியில் கண்டு மகிழலாம்.
செய்திக்குறிப்பிலிருந்து
More

பால புரஸ்கார் விருது
சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
கோணங்கிக்கு கி.ரா. இலக்கிய விருது
Share: 




© Copyright 2020 Tamilonline