மாதுளம்பழ சாலட் மாதுளம்பழ டிப் (dip) மாதுளம்பழ சால்சா மாதுளம்பழ சாதம் மாதுளை சட்னி மாதுளம்பழ ரசம் மாதுளை மில்க் ஷேக்
|
|
|
|
மாதுளம்பழ கேக்
தேவையான பொருட்கள் வெள்ளைக்கரு - 3 முட்டைகளிலிருந்து பொடித்த வெள்ளைச் சர்க்கரை - மைதாமாவு - 1 1/2 கிண்ணம் வெண்ணெய் - 1/3 கிண்ணம் பேகிங் பவுடர் - 1 தேக்கரண்டி மாதுளம்பழச் சாறு - 3/4 கிண்ணம் வனிலா எஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி |
|
செய்முறை
வெள்ளைக்கருவைச் சிறிதும் ஈரப்பசை இல்லாத ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கடையவும். மாவை பேகிங் பவுடருடன் சேர்த்து இருமுறை சலித்து வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரைப் பொடியையும் வெண்ணெயோடு சேர்த்து நன்கு குழைக்கவும். வனிலா எஸன்ஸ் சேர்க்கவும். இந்தக் கலவையில் மாவையும் மாதுளம் பழச் சாறையும் மாற்றி மாற்றி விட்டு மென்மையாகக் கலக்கவும்.
கடைந்த வெள்ளைக்கருவை விட்டு மென்மையாக மடித்துக் கலந்து (fold) நெய் தடவிய கேக் பானில் விட்டு, முன்னதாகவே 350 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சூடேற்றிய அவனில் வைத்து பேக் செய்யவும். கேக்கின் நடுவில் ஒரு மரக்குச்சியை விட்டுப் பார்த்தால் பிசுக்கில்லாமல் வரும்போது வெளியில் எடுத்து 10 நிமிடங்கள் ஆறவைத்து வெட்டவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
மாதுளம்பழ சாலட் மாதுளம்பழ டிப் (dip) மாதுளம்பழ சால்சா மாதுளம்பழ சாதம் மாதுளை சட்னி மாதுளம்பழ ரசம் மாதுளை மில்க் ஷேக்
|
|
|
|
|
|
|