Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பொட்டுக்கடலை வடை
பொட்டுக்கடலை உருண்டை
- தங்கம் ராமசாமி|ஜூன் 2021|
Share:
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை - 1 கிண்ணம்
அவல் - 1/4 கிண்ணம்
பாதாம் பருப்பு - 6
முந்திரிப் பருப்பு - 10
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
கருப்பட்டி (அ) வெல்லம் (பொடித்தது) - 3/4 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 1/4 கிண்ணம்
கசகசா - 1 தேக்கரண்டி

செய்முறை
பொட்டுக்கடலை, அவல் இரண்டையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும். தேங்காய்த் துருவலைச் சிவக்க வறுத்து கசகசா, பாதாம், முந்திரியைத் தனித்தனியாக வறுத்துப் பொடிசெய்து கொள்ளவும். அவல், பொட்டுக்கடலைப் பொடி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்கவும். வாணலியில் நெய்யை நன்றாகச் சுடவைத்து இதில் ஊற்றி உருண்டை பிடிக்கவும். இந்த உருண்டை மிகச் சுவையானது. சத்து மிகுந்தது. எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
அமரர் தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி
More

பொட்டுக்கடலை வடை
Share: 




© Copyright 2020 Tamilonline