தேவையான பொருட்கள் பொட்டுக்கடலை - 1 கிண்ணம் அவல் - 1/4 கிண்ணம் பாதாம் பருப்பு - 6 முந்திரிப் பருப்பு - 10 தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் கருப்பட்டி (அ) வெல்லம் (பொடித்தது) - 3/4 கிண்ணம் ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி நெய் - 1/4 கிண்ணம் கசகசா - 1 தேக்கரண்டி
செய்முறை பொட்டுக்கடலை, அவல் இரண்டையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும். தேங்காய்த் துருவலைச் சிவக்க வறுத்து கசகசா, பாதாம், முந்திரியைத் தனித்தனியாக வறுத்துப் பொடிசெய்து கொள்ளவும். அவல், பொட்டுக்கடலைப் பொடி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்கவும். வாணலியில் நெய்யை நன்றாகச் சுடவைத்து இதில் ஊற்றி உருண்டை பிடிக்கவும். இந்த உருண்டை மிகச் சுவையானது. சத்து மிகுந்தது. எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
அமரர் தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி |