பலாப்பழ அல்வா கொய்யாப் பழ அல்வா
|
|
|
|
|
பிராக்கொலி (broccoli) சுண்டல்
தேவையான பொருட்கள் பாசிப் பருப்பு - 2 மேசைக்கரண்டி பிராக்கொலி - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 2 உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை பாசிப்பருப்பை அரைமணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பிராக்கொலியைச் சிறுசிறு கொத்துகளாக வெட்டிக் கொள்ளவும். பாசிப்பருப்பை வடிகட்டியில் போட்டு நீரில்லாமல் வடித்துக் கொள்ளவும். ஒரு டிஷ்யூ பேப்பரால் நீரை ஓட்ட எடுத்துவிடவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு பிரஷர் குக்கரில் இரண்டு விசில் மட்டுமே விடவும். வாணலியில் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி விட்டு கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் தாளிக்கவும். ஈரமில்லாமல் பிராக்கொலியைத் தாளித்த சாமான்களுடன் போட்டுச் சிறிய தீயில் உப்புப் போட்டு வதக்கவும். பிராக்கொலி சீக்கிரமே வெந்துவிடும்.
பிரஷர் குக்கரில் ஒற்றை ஒற்றையாக ஆனால் நன்றாக வெந்தெடுத்த பாசிப்பருப்பை பிராக்கொலியுடன் சேர்த்து நன்றாகக் குலுக்கவும். சத்தான இந்தச் சுண்டல் மிகவும் ருசியானதும் ஆகும்.
விட்டமின்கள் B1, B2, B3, B5, B6, A, C ஆகியவை தவிர சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், பாஸ்வரம், பொடாசியம், துத்தநாகம் ஆகிய சத்துக்களும் நிரம்பியது பிராக்கொலி என்பதை நினைவில் வைத்துக் கொண்டால், சுண்டல் இன்னுமே சுவையாக இருக்கும்;. |
|
உமா கண்ணன், பீச்வுட், ஓஹையோ |
|
|
More
பலாப்பழ அல்வா கொய்யாப் பழ அல்வா
|
|
|
|
|
|
|