Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் கோடை விழா 2007
இந்திய மேம்பாட்டுக் கழகம் (AID) வழங்கும் ஷோபனா நாட்டிய நிகழ்ச்சி
ஏகல் வித்யாலயா அறக்கட்டளைக்காக 'அமைதிக்கு வழி'
சங்கர நேத்ராலயாவுக்காக டி.என். கிருஷ்ணன் வயலின் இசைநிகழ்ச்சிகள்
- |ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlargeகண் மருத்துவத்தில் உலக அளவில் தனக்கெனச் சிறப்பிடம் பெற்றது சென்னையில் உள்ள 'சங்கர நேத்ராலயா'. நவீன சிகிச்சை முறைகளையும் கருவி களையும் கொண்டு மிகத் தரமான சேவை செய்து வரும் இந்நிறுவனம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை வழங்குவது இதன் தொண்டு நோக்கத்தின் ஒரு வெளிப்பாடே. இந்த நிறுவனத்தின் சேவைகளை விரிவு படுத்தத் தேவையான நிதி திரட்டும் நோக்கத்துடன் பத்மபூஷண், சங்கீத கலாநிதி பேராசிரியர் டி.என். கிருஷ்ணன் அவர்களின் வயலின் இசைக் கச்சேரிகளை அமெரிக்கா வின் பல பகுதிகளிலும் 'ராகா விஷன்' ஏற்பாடு செய்துள்ளது.

எட்டு வயதிலேயே அகில இந்திய வானொலியில் தனது முதல் கச்சேரியை வழங்கிய கிருஷ்ணன் அவர்களுக்கு இப்போது வயது எண்பது. அரியக்குடி, செம்மங்குடி, முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத ஐயர், ஜி.என்.பி., எம்.டி. ராமநாதன் ஆகிய பிரபலங்களுக்கு இவர் பக்கம் வாசித்துள்ளார். உலகின் பல நாடுகளில் தனிக் கச்சேரியும் செய்துள்ளார். தமிழகம், டெல்லி, பெர்க்கலி ஆகிய பல்கலைக் கழகங்களின் இசைக் கல்லூரி களில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். பாரதத்தின் பாரம்பரிய இசை மற்றும் கலைகளைப் பேணி வளர்க்கும் நோக்கத் துடன் 2005-ல் 'டி.என். கிருஷ்ணன் அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவினார். தற்போது அவர் சங்கர நேத்ராலயாவுக்காக அமெரிக்காவின் பல பகுதிகளில் 'வாய்ஸ் ·பார் விஷன்' என்ற தலைப்பில் கச்சேரிகள் நிகழ்த்த உள்ளார்.

'இறையுணர்வோடு கூடிய சேவை' என்ற காஞ்சிப் பெரியவர்களின் ஆணையால் உந்தப்பட்ட டாக்டர் பத்ரிநாத் அவர்கள் இந்த விழி மருத்துவப் பணியில்லத்தைத் தொடங்கி அதற்குச் 'சங்கர நேத்ராலயா' என்றே பெயரிட்டார். இங்குக் கிடைக்கும் உலகத் தரமான சிகிச்சையால் கவரப்பட்டு இந்தியா வின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து பலர் சிகிச்சைக்காக நேத்ராலயாவுக்கு வருகிறார்கள். இங்கு பணியாற்றுபவர்கள் இதை ஓர் ஆலயமாகவும், தமது பணியை வழிபாடாகவும் கருது கிறார்கள். தவிர, கிராமங்களுக்கும் சென்று விழி மருத்துவ முகாம்களை நடத்துகின்றனர்.

உலகின் பார்வையிழந்தோரில் 60 சதவிகிதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதே இவர்களது சேவைக்கான தேவையின் தீவிரத்தைக் காட்டும். கண்புரை (Cataract), கிளக்கோமா (Glaucoma), டயபட்டிக் ரெடினோபதி (Diabetic Retinopathy), சிறுவயதில் பார்வையிழப்பு (Childhood blindness), முதுமையில் மேக்குலா சிதைவு (Age related macular degeneration), ஒளிக்கதிர் சிதறல் பிரச்னைகள் ஆகியவை முக்கியமான கண் பிரச்னைகளாக 'விஷன் 2020' திட்டத்தால் இனம் காணப்பட்டுள்ளன. இவற்றை குணப்படுத்துவதும், வராமல் தடுத்தலும் இத்துறையின் பெரிய சவால்களாக அறியப்பட்டுள்ளன. இதற்கான ஆராய்ச்சி களை மேற்கொள்வதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்பு கமல்நயன் பஜாஜ் நேத்ராலயா ஆராய்ச்சி நிறுவனம் (KBNRI) என அழைக்கப்படுகிறது. இதைத் தவிர ஜூலை 18, 2007 முதல் கொல்கத்தாவில் ஒரு சங்கர நேத்ராலயா மருத்துவ மனை தொடங்கப் பட்டுள்ளது.
இவற்றின் செயல்திட்டங்களை அமல்படுத்த நிதி தேவைப்படுகிறது. அதற்காகவே டி.என். கிருஷ்ணன் அவர்களின் இசைநிகழ்ச்சிகள் அமெரிக்காவில் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறுகின்றன:

இடம்:
தேதி:
தொடர்புகொள்ள:
தொலைபேசி எண்:
மின்னஞ்சல்:
மெம்பிஸ்
ஆகஸ்டு 4
திருமதி லக்ஷ்மிநாராயணன்
901.748.1173
narayanm@bellsouth.net
இடம்:
தேதி:
தொடர்புகொள்ள:
தொலைபேசி எண்:
மின்னஞ்சல்:
சான் டியகோ
ஆகஸ்டு 11
டாக்டர். வாசஸ்பதி
760.310.7688
hltyhrt@hotmail.com
இடம்:
தேதி:
தொடர்புகொள்ள:
தொலைபேசி எண்:
மின்னஞ்சல்:
அட்லாண்டா
ஆகஸ்டு 18
டாக்டர். சேஷ¤ சர்மா
770.491.9305
seshusarma@yahoo.com
இடம்:
தேதி:
தொடர்புகொள்ள:
தொலைபேசி எண்:
மின்னஞ்சல்:
·பீனிக்ஸ்
ஆகஸ்டு 24
திரு. கணபதி ஜயராமன்
480.473.2071
ganapathijg@hotmail.com
இடம்:
தேதி:
தொடர்புகொள்ள:
தொலைபேசி எண்:
மின்னஞ்சல்:
ஹ¥ஸ்டன்
ஆகஸ்டு 26
திரு. சாம் கண்ணப்பன்
281.484.2270
sam.kannappan@gmail.com
இடம்:
தேதி:
தொடர்புகொள்ள:
தொலைபேசி எண்:
மின்னஞ்சல்:
டாலஸ்
செப்டம்பர் 1
திரு. சுரேஷ் தளபதி
817.821.0280
dalapathy@hotmail.com
இடம்:
தேதி:
தொடர்புகொள்ள:
தொலைபேசி எண்:
மின்னஞ்சல்:
ப·பலோ
செப்டம்பர் 7
திரு. ஸ்ரீஹரி, திருமதி ரோஹிணி
716.632.2518
rohini@cedar.buffalo.edu
இடம்:
தேதி:
தொடர்புகொள்ள:
தொலைபேசி எண்:
மின்னஞ்சல்:
சிகாகோ
செப்டம்பர் 22
திரு. பாலா.வி. பாலச்சந்திரன்
847.564.8698
b-bala@kellogg.northwestern.edu
இடம்:
தேதி:
தொடர்புகொள்ள:
தொலைபேசி எண்:
மின்னஞ்சல்:
வாஷிங்டன் DC
செப்டம்பர் 29
திரு. கே.ஜி. வெங்கட்ராமன்
301.646.1232
kvenkatram@aol.com
இடம்:
தேதி:
தொடர்புகொள்ள:
தொலைபேசி எண்:
மின்னஞ்சல்:
சான் ·பிரான்சிஸ்கோ
செப்டம்பர் 30
திரு. ராம் அகெல்லா
925.425.0040
rakella@cisco.com


சங்கரா நேத்ராலயாவின் பணிகளுக்கு உதவும் அமெரிக்க அன்பர்களின் அமைப்பு Sanakara Netralaya Opthalmic Mission Trust, USA அமெரிக்க அரசின் வரிவிலக்குப் பெற்ற 501(c)(3) தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பு. நீங்கள் இதற்குக் கொடுக்கும் நிதி விழியிழந்தோரின் வாழ்வில் ஒளியைக் கொடுக்கும்.

இந்நிகழ்ச்சி பற்றி விவரங்களுக்கு: www.supportsankaranethralaya.org
அமெரிக்காவில் சேவைக் குழு: www.omtrust.org
சங்கர நேத்ராலயாவின் இணையதளம்: www.sankaranethralaya.org

நேத்ராலயாவின் செய்திக் குறிப்பிலிருந்து
More

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் கோடை விழா 2007
இந்திய மேம்பாட்டுக் கழகம் (AID) வழங்கும் ஷோபனா நாட்டிய நிகழ்ச்சி
ஏகல் வித்யாலயா அறக்கட்டளைக்காக 'அமைதிக்கு வழி'
Share: 




© Copyright 2020 Tamilonline