கண் மருத்துவத்தில் உலக அளவில் தனக்கெனச் சிறப்பிடம் பெற்றது சென்னையில் உள்ள 'சங்கர நேத்ராலயா'. நவீன சிகிச்சை முறைகளையும் கருவி களையும் கொண்டு மிகத் தரமான சேவை செய்து வரும் இந்நிறுவனம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை வழங்குவது இதன் தொண்டு நோக்கத்தின் ஒரு வெளிப்பாடே. இந்த நிறுவனத்தின் சேவைகளை விரிவு படுத்தத் தேவையான நிதி திரட்டும் நோக்கத்துடன் பத்மபூஷண், சங்கீத கலாநிதி பேராசிரியர் டி.என். கிருஷ்ணன் அவர்களின் வயலின் இசைக் கச்சேரிகளை அமெரிக்கா வின் பல பகுதிகளிலும் 'ராகா விஷன்' ஏற்பாடு செய்துள்ளது.
எட்டு வயதிலேயே அகில இந்திய வானொலியில் தனது முதல் கச்சேரியை வழங்கிய கிருஷ்ணன் அவர்களுக்கு இப்போது வயது எண்பது. அரியக்குடி, செம்மங்குடி, முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத ஐயர், ஜி.என்.பி., எம்.டி. ராமநாதன் ஆகிய பிரபலங்களுக்கு இவர் பக்கம் வாசித்துள்ளார். உலகின் பல நாடுகளில் தனிக் கச்சேரியும் செய்துள்ளார். தமிழகம், டெல்லி, பெர்க்கலி ஆகிய பல்கலைக் கழகங்களின் இசைக் கல்லூரி களில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். பாரதத்தின் பாரம்பரிய இசை மற்றும் கலைகளைப் பேணி வளர்க்கும் நோக்கத் துடன் 2005-ல் 'டி.என். கிருஷ்ணன் அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவினார். தற்போது அவர் சங்கர நேத்ராலயாவுக்காக அமெரிக்காவின் பல பகுதிகளில் 'வாய்ஸ் ·பார் விஷன்' என்ற தலைப்பில் கச்சேரிகள் நிகழ்த்த உள்ளார்.
'இறையுணர்வோடு கூடிய சேவை' என்ற காஞ்சிப் பெரியவர்களின் ஆணையால் உந்தப்பட்ட டாக்டர் பத்ரிநாத் அவர்கள் இந்த விழி மருத்துவப் பணியில்லத்தைத் தொடங்கி அதற்குச் 'சங்கர நேத்ராலயா' என்றே பெயரிட்டார். இங்குக் கிடைக்கும் உலகத் தரமான சிகிச்சையால் கவரப்பட்டு இந்தியா வின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து பலர் சிகிச்சைக்காக நேத்ராலயாவுக்கு வருகிறார்கள். இங்கு பணியாற்றுபவர்கள் இதை ஓர் ஆலயமாகவும், தமது பணியை வழிபாடாகவும் கருது கிறார்கள். தவிர, கிராமங்களுக்கும் சென்று விழி மருத்துவ முகாம்களை நடத்துகின்றனர்.
உலகின் பார்வையிழந்தோரில் 60 சதவிகிதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதே இவர்களது சேவைக்கான தேவையின் தீவிரத்தைக் காட்டும். கண்புரை (Cataract), கிளக்கோமா (Glaucoma), டயபட்டிக் ரெடினோபதி (Diabetic Retinopathy), சிறுவயதில் பார்வையிழப்பு (Childhood blindness), முதுமையில் மேக்குலா சிதைவு (Age related macular degeneration), ஒளிக்கதிர் சிதறல் பிரச்னைகள் ஆகியவை முக்கியமான கண் பிரச்னைகளாக 'விஷன் 2020' திட்டத்தால் இனம் காணப்பட்டுள்ளன. இவற்றை குணப்படுத்துவதும், வராமல் தடுத்தலும் இத்துறையின் பெரிய சவால்களாக அறியப்பட்டுள்ளன. இதற்கான ஆராய்ச்சி களை மேற்கொள்வதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்பு கமல்நயன் பஜாஜ் நேத்ராலயா ஆராய்ச்சி நிறுவனம் (KBNRI) என அழைக்கப்படுகிறது. இதைத் தவிர ஜூலை 18, 2007 முதல் கொல்கத்தாவில் ஒரு சங்கர நேத்ராலயா மருத்துவ மனை தொடங்கப் பட்டுள்ளது.
இவற்றின் செயல்திட்டங்களை அமல்படுத்த நிதி தேவைப்படுகிறது. அதற்காகவே டி.என். கிருஷ்ணன் அவர்களின் இசைநிகழ்ச்சிகள் அமெரிக்காவில் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறுகின்றன:
இடம்: தேதி: தொடர்புகொள்ள: தொலைபேசி எண்: மின்னஞ்சல்: | மெம்பிஸ் ஆகஸ்டு 4 திருமதி லக்ஷ்மிநாராயணன் 901.748.1173 narayanm@bellsouth.net | இடம்: தேதி: தொடர்புகொள்ள: தொலைபேசி எண்: மின்னஞ்சல்: | சான் டியகோ ஆகஸ்டு 11 டாக்டர். வாசஸ்பதி 760.310.7688 hltyhrt@hotmail.com | இடம்: தேதி: தொடர்புகொள்ள: தொலைபேசி எண்: மின்னஞ்சல்: | அட்லாண்டா ஆகஸ்டு 18 டாக்டர். சேஷ¤ சர்மா 770.491.9305 seshusarma@yahoo.com | இடம்: தேதி: தொடர்புகொள்ள: தொலைபேசி எண்: மின்னஞ்சல்: | ·பீனிக்ஸ் ஆகஸ்டு 24 திரு. கணபதி ஜயராமன் 480.473.2071 ganapathijg@hotmail.com | இடம்: தேதி: தொடர்புகொள்ள: தொலைபேசி எண்: மின்னஞ்சல்: | ஹ¥ஸ்டன் ஆகஸ்டு 26 திரு. சாம் கண்ணப்பன் 281.484.2270 sam.kannappan@gmail.com | இடம்: தேதி: தொடர்புகொள்ள: தொலைபேசி எண்: மின்னஞ்சல்: | டாலஸ் செப்டம்பர் 1 திரு. சுரேஷ் தளபதி 817.821.0280 dalapathy@hotmail.com | இடம்: தேதி: தொடர்புகொள்ள: தொலைபேசி எண்: மின்னஞ்சல்: | ப·பலோ செப்டம்பர் 7 திரு. ஸ்ரீஹரி, திருமதி ரோஹிணி 716.632.2518 rohini@cedar.buffalo.edu | இடம்: தேதி: தொடர்புகொள்ள: தொலைபேசி எண்: மின்னஞ்சல்: | சிகாகோ செப்டம்பர் 22 திரு. பாலா.வி. பாலச்சந்திரன் 847.564.8698 b-bala@kellogg.northwestern.edu | இடம்: தேதி: தொடர்புகொள்ள: தொலைபேசி எண்: மின்னஞ்சல்: | வாஷிங்டன் DC செப்டம்பர் 29 திரு. கே.ஜி. வெங்கட்ராமன் 301.646.1232 kvenkatram@aol.com | இடம்: தேதி: தொடர்புகொள்ள: தொலைபேசி எண்: மின்னஞ்சல்: | சான் ·பிரான்சிஸ்கோ செப்டம்பர் 30 திரு. ராம் அகெல்லா 925.425.0040 rakella@cisco.com |
சங்கரா நேத்ராலயாவின் பணிகளுக்கு உதவும் அமெரிக்க அன்பர்களின் அமைப்பு Sanakara Netralaya Opthalmic Mission Trust, USA அமெரிக்க அரசின் வரிவிலக்குப் பெற்ற 501(c)(3) தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பு. நீங்கள் இதற்குக் கொடுக்கும் நிதி விழியிழந்தோரின் வாழ்வில் ஒளியைக் கொடுக்கும்.
இந்நிகழ்ச்சி பற்றி விவரங்களுக்கு: www.supportsankaranethralaya.org அமெரிக்காவில் சேவைக் குழு: www.omtrust.org சங்கர நேத்ராலயாவின் இணையதளம்: www.sankaranethralaya.org
நேத்ராலயாவின் செய்திக் குறிப்பிலிருந்து |