Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 39வது ஆண்டு விழா
கொலரடோ முத்தமிழ் விழா-கோடைத் திருவிழா
ஏழைச் சிறுவர் கல்விக்கு நிதி திரட்ட 'குஜாரிஷ்'
சிகாகோவில் ஸ்ரீ மஹா ருத்ரம்
சிகாகோ ஜே பிர்ட்ஸ்கர் அரங்கில் நாட்யா டான்ஸ் தியேடர் நிகழ்ச்சி
- |ஆகஸ்டு 2009|
Share:
Click Here Enlarge2009 ஆகஸ்டு 19, 20 தேதிகளில் மதியம் உச்சிவேளையில் நாட்யா டான்ஸ் தியேடர் சிகாகோ மிலேனியம் பார்க்கில் உள்ள ஜே பிர்ட்ஸ்கர் திறந்தவெளி அரங்கில் பரதநாட்டிய நிகழ்ச்சியை இலவசமாக வழங்க இருக்கிறது. முன்னொரு காலத்தில் இந்தியாவில் கோவில் குத்துவிளக்கின் ஒளியில் சதிர்க்கச்சேரி பார்த்த அனுபவத்தை மீட்டு வழங்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி இயற்கை ஒளியில் நடைபெறும்.

நாட்யாவின் கலை இயக்குனர் ஹேமா ராஜகோபாலன் "பெரிய திறந்தவெளி அரங்கத்தில் நாட்டியமாடுபவரின் முகபாவத்தைப் பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஒரு குழு நடனத்தைச் சரியாக வடிவமைப்பதன் மூலம் பாவத்தை வெளிக்கொணரும் புதிய வாய்ப்பை அது தருகிறது” என்று கூறுகிறார். 2006ல் இதே அரங்கத்தில் யோ யோ மா (செல்லிஸ்ட்) மற்றும் சில்க்ரூட் இசைக்குழுவுடன் நாட்யா முதலில் தோன்றியது. பின்னர் வந்த வருடங்களில் ஹெட்விக் டான்ஸஸ், மோர்டைன் & கோ ஆகியவற்றுடன் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது.

"நான் பழம்பொருள் காட்சியகக் காவலரல்ல. ஒரு படைப்பாளி. எனவே எப்போதும் மரபுடன் புதுமையை இணைத்துப் படைப்பதற்கான கலையார்வம் என்னில் உள்ளது” என்கிறார் ஹேமா. இணைக் கலை இயக்குனரும் ஹேமாவின் மகளுமான கிருத்திகா ராஜகோபாலன் இதன் அவசியத்தை உணர்ந்தே இருப்பது தொன்மையைக் காப்பதோடு கலையை முன்னெடுத்துச் செல்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் தகவலுக்கு: www.millenniumpark.org, www.natya.com.
தொலைபேசி: 312-742-1168
'நாட்யா' செய்திக் குறிப்பிலிருந்து
More

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 39வது ஆண்டு விழா
கொலரடோ முத்தமிழ் விழா-கோடைத் திருவிழா
ஏழைச் சிறுவர் கல்விக்கு நிதி திரட்ட 'குஜாரிஷ்'
சிகாகோவில் ஸ்ரீ மஹா ருத்ரம்
Share: 




© Copyright 2020 Tamilonline