Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
இன்னும் கொஞ்சம் வேணுமா!
கேழ்வரகு பிஸ்கட்
கத்தரிக்காய் சாதம்
- நித்யா நவீன்|மே 2013|
Share:
தேவையான பொருட்கள்
சாதம் – 1 கிண்ணம்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 4
வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) – 1/4 கிண்ணம்
கத்தரிக்காய் (துண்டுகள்) - 1/2 கிண்ணம்
கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

வறுத்துப் பொடிக்க
லவங்கம் – 1
பட்டை - 1 அங்குலம்
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
எள் – 1/2 தேக்கரண்டி
கொத்துமல்லி விதை (தனியா) - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும்.

எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். கத்தரிக்காய் சேர்த்து வதங்கியவுடன், உப்பு, கொத்துமல்லி, வறுத்த பொடி சேர்க்கவும். அத்துடன் உதிரியாக வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

நித்யா நவீன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
More

இன்னும் கொஞ்சம் வேணுமா!
கேழ்வரகு பிஸ்கட்
Share: 




© Copyright 2020 Tamilonline