தேவையான பொருட்கள் சாதம் – 1 கிண்ணம் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - 4 வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) – 1/4 கிண்ணம் கத்தரிக்காய் (துண்டுகள்) - 1/2 கிண்ணம் கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க லவங்கம் – 1 பட்டை - 1 அங்குலம் உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி எள் – 1/2 தேக்கரண்டி கொத்துமல்லி விதை (தனியா) - 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் – 2 தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும்.
எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். கத்தரிக்காய் சேர்த்து வதங்கியவுடன், உப்பு, கொத்துமல்லி, வறுத்த பொடி சேர்க்கவும். அத்துடன் உதிரியாக வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
நித்யா நவீன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |