|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|பிப்ரவரி 2013| |
|
|
|
1) ஒரு பெட்டியில் 20 ரொட்டிகள் இருந்தன. அவற்றை ஆண்களுக்குத் தலா 2 வீதமும், பெண்களுக்குத் தலா 1 வீதமும், மீதமுள்ள குழந்தைகளுக்குத் தலா 1/2 என்றும் பிரித்துக் கொண்டனர். ரொட்டியின் எண்ணிக்கையும் அவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தது என்றால் ஆண், பெண், குழந்தைகள் எவ்வளவு பேர் அதனைப் பகிர்ந்து கொண்டனர்?
2) ராஜேஷின் வயதையும் அவன் தம்பியின் வயதையும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை 42. ராஜேஷ் வயதின் இரண்டடுக்கையும் அவன் தம்பி வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 914 வருகிறது. ராஜேஷின் வயதைவிட அவன் தம்பியின் வயது எட்டு வருடம் குறைவு என்றால் ராஜேஷின் வயது என்ன, அவன் தம்பியின் வயது என்ன?
3) அது ஒரு நான்கு இலக்க எண். முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகை பதினொன்று. இரண்டு மற்றும் மூன்றாம் இலக்க எண்களின் கூட்டுத்தொகையும் பதினொன்று. மூன்று மற்றும் நான்காம் எண்களின் கூட்டுத்தொகையும் பதினொன்று. முதல் மற்றும் இறுதி இலக்க எண்களின் கூட்டுத்தொகையும் பதினொன்று என்றால் அந்த எண் எது? அதே போன்ற வேறு எண் எது?
4) வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
101, 83, 67, 53, ........ ?
5) ஒரு தோப்பில் ஒவ்வொரு ஐந்து தென்னை மரங்களுக்கும் இரண்டு மாமரங்களை நட்டுள்ளனர். மாமரங்களின் எண்ணிக்கையை விடத் தென்னை மரங்களின் எண்ணிக்கை 12 அதிகமாக உள்ளது என்றால் அந்தத் தோப்பில் இருக்கும் மாமரங்கள் எத்தனை, தென்னை மரங்கள் எத்தனை?
அரவிந்த் |
|
விடைகள் 1) ரொட்டியின் எண்ணிக்கை = 20 ஆண்களுக்கு = 2 பெண்களுக்கு = 1 குழந்தைகளுக்கு = 1/2
ரொட்டியின் எண்ணிக்கையும், பெறுபவர்களின் எண்ணிக்கையும் சமம் = ரொட்டி = பெறுபவர்கள் = 20 என்றால்
5 x 2 = 10 5 x 1 = 5 10 x 1/2 = 5 --- ---------- 20 20
ஆக ஆண்கள் 5 பேர்; பெண்கள் 5 பேர், குழந்தைகள் 10 பேர் ஆக மொத்தம் 20 பேர் ரொட்டிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
2) ராஜேஷின் வயது = x என்க தம்பியின் வயது = y = ராஜேஷின் வயதைவிட 8 வருடம் குறைவு என்பதால் = x - 8 x + y = 42 x + x - 8 = 42 2x - 8 = 42 2x = 42 + 8 = 50 x = 25
எனவே ராஜேஷின் வயது 25. அவன் தம்பியின் வயது = 25 - 8 = 17 ராஜேஷின் வயது + அவன் தம்பியின் வயது = 25 + 17 = 42 ராஜேஷ் வயதின் இரண்டடுக்கு + அவன் தம்பி வயதின் இரண்டடுக்கு = 25 x 25 + 17 x 17 = 625 + 289 = 914 எனவே ராஜேஷிவின் வயது 25; தம்பியின் வயது 17.
3) அந்த எண் = 5656 முதல் இரண்டு இலக்கங்களின் கூட்டுத்தொகை = 5 + 6 = 11 இரண்டு மற்றும் மூன்றாம் எண்களின் கூட்டுத்தொகை = 6 + 5 = 11 மூன்று மற்றும் நான்காம் எண்களின் கூட்டுத்தொகை = 5 + 6 = 11 முதல் மற்றும் இறுதி இலக்க எண்களின் கூட்டுத்தொகை = 6 + 5 = 11. அதே போன்ற வேறு எண் = 6565.
4) வரிசை கீழ்கண்டவாறு அமைந்துள்ளது. 102 + 1 (101); 92 + 2 (83); 82 + 3 (67); 72 + 4 (53); ஆகவே அடுத்து வர வேண்டிய எண் = 62 + 5 = 41
5) ஒவ்வொரு ஐந்து தென்னை மரத்திற்கும் இரண்டு மா மரங்கள் என்றால் = மாமரங்கள்/தென்னை மரங்கள் = 2/5 = 4/10 = 8/20. மாமரங்களை விட தென்னை மரங்களின் எண்ணிக்கை 12 அதிகம் = 20 - 8 = 12; ஆக, தென்னை மரங்கள் = 20 மா மரங்கள் = 8. |
|
|
|
|
|
|
|