|
|
1. ஒரு பாட்டில் நெய்யை எடை போட்டபோது 1.5 கிலோ இருந்தது. அதில் பாதி காலி செய்த பிறகு எடை பார்த்தால் 800கிராம் ஆக இருந்தது. அப்படியானால் பாட்டிலின் எடை என்ன?
2. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
22, 21, 23, 22, 24, 23, ...
3. தந்தையின் வயதோடு மகனின் வயதைக் கூட்டினால் 66 வருகிறது. மகனின் வயது, தந்தை வயதின் தலைகீழ் எண்ணாக உள்ளது. தந்தை பணியாற்றும் பள்ளியிலேயே மகனும் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறான் என்றால் அவர்களது வயதுகள் என்ன?
4. ஒரு கூடையில் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் சேர்த்து மொத்தம் 60 பழங்கள் இருந்தன. ஆரஞ்சைவிட ஆப்பிள்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகம். மாம்பழங்களின் எண்ணிக்கை ஆரஞ்சைவிட 6 அதிகம் என்றால் பழங்களின் தனித்தனி எண்ணிக்கை என்ன?
5. 7/4, 13/8 ----- 49/32, 97/64. வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?
அரவிந்த் |
|
விடைகள் 1) பாட்டிலின் எடை x என்க. நெய்யின் எடை y என்க. x + y = 1.5 கிலோ = 1500 கிராம் நெய்யில் பாதி காலி ஆன பின் அதன் எடை = x + y/2 = 800கிராம். 2x + y = 1600 2x + y = 1600 (-) x + y = 1500 ------------------ x = 100 ----------------- பாட்டிலின் எடை = 100 கிராம்.
2) இரண்டு எண் வரிசைகளின் கூட்டுத் தொடராக இவ்வரிசை அமைந்துள்ளது. முதல் வரிசை 22, 23, 24... என ஏறு வரிசையிலும், அடுத்த எண் வரிசை 21, 22, 23... என்ற வரிசையிலும் அமைந்துள்ளது. இதன் படி அடுத்து வர வேண்டிய எண் = 25.
(-1 +2, -1 + 2 என்ற வரிசையில் அமைந்திருப்பதாகக் கொண்டாலும் வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் = 25)
3) 42, 24 ; 51, 15; 60, 06 என மூன்று ஜோடி எண்கள் மட்டுமே கூட்டுத் தொகை 66ஐயும் வல, இடமாக ஒரே எண்களைக் கொண்டதாகவும் உள்ளன. இதில் மகன் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறான் என்ற குறிப்பு இருப்பதால் 51, 15 என்பது மட்டுமே பொருந்துகிறது. ஆகவே தந்தையின் வயது 51; மகனின் வயது 15.
4) ஆப்பிள் = x ஆரஞ்சு = y மாம்பழம் = z x + y + z = 60 ஆரஞ்சை விட ஆப்பிள்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகம் என்றால் x = 4y மாம்பழங்களின் எண்ணிக்கை ஆரஞ்சை விட 6 அதிகம் என்றால் = z = y + 6
x + y + z = 60 = 4y + y + y + 6 = 60 6y + 6 = 60 6y = 60 - 6 6y = 54 y = 9 x = 4Y = 4 * 9 = 36 z = y + 6 = 9 + 6 = 15 ஆக கூடையில் இருந்த பழங்களில் ஆப்பிள் = 36; ஆரஞ்சு = 9; மாம்பழம் = 15.
5) வரிசை இரண்டு பிரிவுகளாய் அமைந்துள்ளது. மேல் வரிசை (x, x*2-1 என்ற வரிசையில் அமைந்துள்ளது. அதன்படி 7, 7*2 = 14-1 = 13; 49*2 = 98-1 = 97. ஆகவே மேல் வரிசையில் வர வேண்டிய எண் = 13*2-1 = 25
கீழ் வரிசை 4, 8, ... 32, 64 என உள்ளது. நடுவில் விடுபட்ட எண் = 16. ஆகவே வரிசையில் விடுபட்ட எண் = 25/16 |
|
|
|
|
|
|
|