எதிர்பாராமல் நடந்தது.... ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது
|
|
29வது சென்னை புத்தகக் காட்சி |
|
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2006| |
|
|
|
ஜனவரி 6-ம் தேதி தொடங்கிப் பதினொரு நாட்களுக்கு 29வது சென்னை புத்தகக் கண்காட்சி காயிதே மில்லத் கல்லூரியில் நடைபெற்றது.
பொதுமக்கள் பெருமளவில் புத்தகக் கண்காட்சிக்குப் படையெடுத்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எல்லா விற்பனை யாளர்களும் பத்து சதவிகிதம் கழிவு கொடுத்ததால் பல தனியார் மற்றும் கல்லூரி/அலுவலக நூலகங்களுக்கான தேவைகளைக் காத்திருந்து இங்கே வாங்கித் தீர்த்தனர். இதற்காகவே மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்தது குறிப்பிடத் தக்கது.
200 பேர்கள் புத்தகக் கண்காட்சிக் கென்றே வெளிநாடுகளிலிருந்து வந்தி ருந்தது முதன்முறை என்று கருதப் படுகிறது.
பார்வையாளர் எண்ணிக்கை வார நாட்களில் சுமார் இருபதாயிரத்தையும், சனி ஞாயிறுகளில் நாற்பதாயிரத்தையும் தொட்டது. மொத்தத்தில் 235,000 பேர் வந்திருந்தது முந்தைய ஆண்டைவிட 41 சதவிகிதம் கூடுதல்.
பெரிய பதிப்பாளர் களுக்கு மட்டுமல்லாமல் பல சிறிய விற்பனையாளர்களுக்கும் இது அறுவடைக் காலமாகவே இருந்தது. புத்தக விற்பனை யும் சென்ற ஆண்டைவிட நாற்பது சதவீதம் அதிகமாம். சர்வோதய இலக்கியப் பண்ணை காந்தியின் வாழ்க்கை வரலாறான 'சத்திய சோதனை'யை மட்டுமே 7000 பிரதிகளுக்கு மேல் விற்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சுமார் 130க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. மேலும் பி.எஸ்.என்.எல்., மத்திய அரசின் புள்ளியியல் துறை ஆகியவையும் இடம் பெற்றது குறிப்பிடத் தக்கது. இம்முறை இந்திய உலக, தமிழக வரைபடங்களுக்கென்று தனியாகக் கடை இருந்ததும் சிறப்பு.
கண்காட்சியில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, இலவச சர்க்கரை நோய்ப் பரிசோதனை, ரத்த தான முகாம் ஆகியவையும் நடத்தப்பட்டன. வருபவர் கள் இங்கிருந்த உணவகத்திற்கும் படையெடுக்கத்தான் செய்தனர். வரிசையில் நின்றுதான் இடம்பிடிக்க வேண்டியிருந்தது. |
|
இன்·போடிரிக்ஸ் என்கிற மென் பொருள் நிறுவனம் பாரம்பரிய விளை யாட்டுகளான தாயம், பல்லாங்குழிகளை கம்ப்யூட்டரில் விளையாடும்படி குறுந் தகடுகளில் விற்பனை செய்தது. சிறுவர், சிறுமியர் இடையே இந்த குறுந்தகட்டிற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
கண்காட்சி வளாகத்திற்கு வெளியே இருந்த பழைய புத்தகக் கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாகத்தான் நடந்தது. இதற்கிடையில் எக்ஸ்னோரா அமைப் பின் சார்பில் நடமாடும் புத்தகக்கடை ஒன்றும் கண்காட்சியில் இடம் பெற்றது முக்கியமானது.
சென்னை புத்தகக் கண்காட்சியின் வெற்றி, இதன் அமைப்பாளர்களை ஓர் உலகப் புத்தகக் கண்காட்சி நடத்தலாமே என்று எண்ண வைத்திருக்கிறது!
2007-ம் ஆண்டு மார்ச் மாதம் உலகப் புத்தகக் காட்சி சென்னையில் நடைபெற உள்ளது என்று அறிவித்தார் தகவலை தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன். வளர்ச்சி என்றால் இதுதானே!
கேடிஸ்ரீ |
|
|
More
எதிர்பாராமல் நடந்தது.... ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது
|
|
|
|
|
|
|