முதுமை அதற்கேனும்....
|
|
|
கோபத்தின் கடைசிப் பக்கத்தில்... முத்த அரிசிகள் கொண்டு நான் வளர்க்கும் மன்னிப்பு மயிலிறகு ஒன்று உனக்காய் உறங்கிக் கிடக்கிறது!
*****
நாள்... கிழமை..
கட்ட மறந்த மின்சாரச் சீட்டு கடி போட்ட மேலாளர் கார் இடித்த ஆட்டோ கலர் மாறிய பிடித்த சேலை கடுப்படித்த அறுவை நண்பன் கனமாய் நெஞ்சில் அக்கிழமை குறிக்கும் முன் “என்னாச்சுடா” என்று நீ கேட்ட பொழுதில் எல்லாம் சுகமாயிற்று!
***** |
|
ஞாபகம்
உன் வாசனைத் திரவியத்தை வழியெங்கும் கொட்டிச் சென்றாயா... நீ ஊர் சென்றும் மணக்கும் உன் ஞாபகங்கள்!
தேவி அருள்மொழி அண்ணாமலை, சிகாகோ |
|
|
More
முதுமை அதற்கேனும்....
|
|
|
|
|
|
|