தென்கலிஃபோர்னியா தமிழ் மன்ற ஆண்டுவிழா சிகாகோவில் 'தேனிசை மழை' சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் முத்தமிழ் விழா நாட்யாவின் 'The Flowering Tree' 'கலாரசனா'வின் 10வது ஆண்டு விழா ரேகா நாகராஜன் நாட்டிய அரங்கேற்றம் அரவிந்த் சுந்தரராஜன் கச்சேரி ஆஷா நிகேதனுக்கு நிதி திரட்டும் நிகழ்வு அபிஷேக் இசை அரங்கேற்றம் டெட்ராயிட் ஸ்ரீ பாலாஜி கோவில் 7 வது ஆண்டு நிறைவு விழா சன்னிவேல் பாலாஜி கோவில் நவராத்திரி விழா பராசக்தி கோவில் - ஓக்லேந்து பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
|
|
மீரா ஜெயராமன் பரதநாட்டிய அரங்கேற்றம் |
|
- கோமதி ஷங்கர்|நவம்பர் 2011| |
|
|
|
|
|
அக்டோபர் 22, 2011 அன்று சங்கல்பா டான்ஸ் அகாடமி மாணவியான மீரா ஜெயராமனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஃப்ரீமான்ட் ஒலோனி கல்லூரியில் நடைபெற்றது. ஆரபி ராகத்தில் விநாயகரைப் போற்றிய புஷ்பாஞ்சலியுடன் தொடங்கியது நிகழ்ச்சி. அடுத்து வந்த சரஸ்வதி தேவியின் புகழ்பாடிய 'சங்கீத சாம்ராஜ்ய சஞ்சாரிணி' பாடலுக்கு மீரா நேர்த்தியாக ஆதிசங்கரரின் வரலாற்றையும் அபிநயித்தது பாராட்டுக்குரியது. நிகழ்ச்சியின் சிகரமாகச் சாருகேசி ராகத்தில் 'இன்னும் என் மனம்' வர்ணத்துக்குக் கண்ணனின் நாயகியாய் சிருங்கார ரசம் சொட்டச் சொட்ட ஆடியது வெகு அழகு. தொடர்ந்து 'சங்கர ஸ்ரீகிரி', 'பாவயாமி கோபால பாலம்', மீரா பஜன் நடனம் ஆகியவை பக்திப் பரவசமூட்டுவதாய் இருந்தன.
பத்மநாபஸ்வாமியின் பெருமை பாடிய தில்லானாவுக்கு அசராமல் தாளத்திற்கேற்பக் கால்களை பேச வைத்த மீரா பார்வையாளர்களைக் கவர்ந்தார். இவ்வளவு நேர்த்தியாக மீரா ஆடியது குரு நிருபமா வைத்யநாதனின் திறமைக்குச் சான்று. ஆஷா ரமேஷ் (பாட்டு), நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியோரின் பின்னணியில் மீரா பரிமளித்தார். |
|
கோமதி ஷங்கர் |
|
|
More