பாட்டி சொன்னா கேட்டுக்கணும் கொலு ஹாப்பிங்! புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 பாஸ்டனில் மார்பகப் புற்றுக்கு எதிரான நடை Carnatic Music Idol USA ஹேமா முள்ளூர் புதிய பதவி '3rd i' திரைப்பட விழா
|
|
|
|
|
சுருதி பிரபு பதினைந்து வயதுப் பள்ளி மாணவி. அவருடைய பாட்டி கிளாகோமாவால் பாதிக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறார். எனவே கண் நோய் கொண்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இந்த எண்ணத்தோடு அவர் சங்கர நேத்ராலயாவின் OM டிரஸ்டை அணுகியபோது அவர்கள் மகிழ்ச்சியோடு ஒத்துழைத்தார்கள்.
அப்படி நடந்ததுதான் அக்டோபர் 8, 2011 அன்று டாலஸ் மெட்ரோப்ளக்ஸில் 'கருணையின் சிறு செயல்கள்' (Small Acts of Kindness) என்ற 72 குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் மெல்லிசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, நடனங்கள் என்று எல்லா அம்சங்களுமே இருந்தன. சுருதி பிரபுவே வடிவமைத்த பியானோ இசையுடன் தொடங்கியது நிகழ்ச்சி. இதில் ஸ்ருதிலயா, பிரணவம் இசைப்பள்ளி, நிருத்ய சக்தி நடனப்பள்ளி, திவ்யத்வனி என்று அப்பகுதியின் பல கலைப் பள்ளிகளும் உற்சாகத்தோடு பங்கேற்றன. வந்திருந்தோர் அள்ளிக் கொடுத்தபோது, மூன்று மாத ஒத்திகையின் சிரமம் சற்றும் தெரியவில்லையாம். |
|
மாயக்கூத்தன் கிருஷ்ணன் |
|
|
More