துப்புரவுத் தொழிலாளி காந்தி கைத்துப்பாக்கி காப்பாற்றாது காந்திஜியின் நகைச்சுவை ஐந்தே நிமிடங்கள்! குற்றாலமும் வேண்டாம்!
|
|
குஷ்டமும் கஷ்டம் அல்ல! |
|
- |அக்டோபர் 2011| |
|
|
|
|
|
காந்திஜி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து விட்டு, இந்தியாவில் வக்கீலாக பணிபுரிந்து வந்து கொண்டிருந்த காலம். ஒருநாள், காந்தியின் வீட்டு வாசலில் குஷ்டநோய் உள்ள ஒருவர் வந்து பிச்சை கேட்டார். அவரைப் பற்றி, குடும்பம் பற்றி, பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தது பற்றி விசாரித்தார். ஒருவேளை சோறு மட்டும் போட்டு அனுப்பி வைத்துவிட காந்தி விரும்பவில்லை. அவரைத் தன் வீட்டிலேயே தங்கச் சொன்னார். அவர் உடம்பிலிருந்த புண்களைத் தாமே துடைத்து மருந்திட்டார். ஓரளவு குணமாகும் வரை சில நாட்கள், அந்தப் பிச்சைக்காரருக்குத் தொண்டு செய்தார். அவர் உடல் நலம் சற்றுத் தேறியதும், ஒப்பந்தக் கூலிகளுக்காக ஏற்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதுமுதல் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காந்திஜியின் உள்ளத்தில் அதிகமானது. நண்பர் அளித்த நன்கொடை மூலம் ஏழைகளுக்காக ஓர் இலவச மருத்துவமனையை நிறுவி, டாக்டர் பூத் என்பவரை அதன் பொறுப்பாளராக நியமித்தார். தான் அவருக்கு உதவியாளராகப் பணி செய்தார். |
|
|
|
|
More
துப்புரவுத் தொழிலாளி காந்தி கைத்துப்பாக்கி காப்பாற்றாது காந்திஜியின் நகைச்சுவை ஐந்தே நிமிடங்கள்! குற்றாலமும் வேண்டாம்!
|
|
|
|
|
|
|