சப்பாத்தியோடு சாப்பிட...
|
|
|
|
தேவையான பொருட்கள் வேகவைத்த பேபி கார்ன் - 1 கிண்ணம் வெண்ணெய் - 2 மேசைக் கரண்டி வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) வேக வைத்த பட்டாணி - 1/2 கிண்ணம் சீரகம் - 1/2 தேக்கரண்டி பூண்டு, இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி சிகப்பு மிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி கொத்துமல்லி விதை, சீரகப் பொடி - 1 தேக்கரண்டி பாவ்பாஜி மசாலா - 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி சர்க்கரை - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1 மேசைக் கரண்டி கசூரி மேத்தி - 1
செய்முறை பாத்திரத்தில் எண்ணெயும், வெண்ணெயும் போட்டு அடுப்பை நிதானமாக எரிய விட்டு சீரகம் போட்டுச் சிவந்ததும் வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது, தக்காளி, கேப்சிகம், பட்டாணி, மிளகாய்ப் பொடி, தனியா-சீரகப் பொடி, உப்பு, சர்க்கரை போட்டு நன்றாக வதக்கவும். மசாலாப் பொடி, கசூரி மேத்தியும் போட்டு வதக்கி, தண்ணீர் விட்டு பேபி கார்னைப் போட்டு ஒரு கொதி வந்ததும், இறக்கி, எலுமிச்சைச் சாறு ஊற்றி, கொத்துமல்லி போட்டு அலங்கரிக்கவும். கெட்டிப் பால் இருந்தால் சேர்க்கலாம். மிகவும் சுவையான டிஷ் இது. |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி |
|
|
More
சப்பாத்தியோடு சாப்பிட...
|
|
|
|
|
|
|