|
|
1. ராமு தம்பதியினருக்கு ஐந்து மகன்கள். ஒவ்வொரு மகனுக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் என்றால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
2. ஒரு கூடையில் ஐந்து மாம்பழங்கள் இருந்தன. ராஜூ அவற்றை ஐந்து சிறுவர்களுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தான். அப்படியும் ஒரு பழம் கூடைக்குள் இருந்தது, எப்படி?
3. ஒரு வியாபாரி ஒரு வெங்காய மூட்டை வாங்கினார். அவர் வாங்கியதும் அதன் விலை 25% அதிகரித்து விட்டது. ஆனால் விற்கும்போது அதன் விலை 25% சரிந்து விட்டது. அவனுக்குக் கிடைத்தது லாபமா, நட்டமா?
4. சந்தைக்குப் போன சண்முகம் 1000 ரூபாய் கொடுத்து வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாங்கினார். வீட்டுக்கு வந்து பார்த்த போது அவற்றின் எண்ணிக்கை மொத்தம் ஆயிரமாக இருந்தது. அப்படியென்றால் ஒவ்வொன்றிற்கும் அவர் எவ்வளவு செலவழித்திருப்பார்?
5. 1, 9, 49, 121, வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
அரவிந்த் |
|
விடைகள் 1. அம்மா, அப்பா 2 பேர். மகன்கள் 5 பேர். 1 மகள். அவள், எல்லா மகன்களுக்கும் இளையவள். ஆக, மொத்தக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 8.
2. நான்கு சிறுவர்களுக்கு நான்கு மாம்பழங்களைத் தந்தவன், ஐந்தாவது சிறுவனுக்குக் கூடையோடு பழத்தைத் தந்து விட்டான்.
3. வியாபாரி வாங்கிய விலை ரூ. 100 என்க. அதிகரித்த விலை = 25% = 100 + 25 = 125. அவன் விற்ற போது சரிவு = 25% = 125*25% = 125 - 31.25 = 93.75 நூறு ரூபாய்க்கு வெங்காயத்தை வாங்கிய வியாபாரி 93.75 ரூபாய்க்கு விற்றதால் அவனுக்குக் ஏற்பட்டது நஷ்டமே.
4. கொண்டுபோன பணம் = 1000 ரூபாய் வாங்கி வந்த பொருட்களின் எண்ணிக்கை மொத்தம் = 1000
பொருட்களின் எண்ணிக்கையும் ரூபாயின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். அப்படியென்றால், கீழ்கண்டவாறு அவன் வாங்கியிருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
பொருட்கள் எண்ணிக்கை விலை மொத்தம்
வெற்றிலை 940 0.50 பைசா 470.00 பாக்கு 50 10.00 ரூபாய் 500.00 சுண்ணாம்பு 10 3.00 ரூபாய் 30.00
மொத்தம் 1000 பொருட்கள், 1000 ரூபாய்.
5. இந்த வரிசை, 1, 3, 7, 11 என்ற பகா எண்களின் வர்க்கங்களின் தொடராக அமைந்துள்ளது. 1 ^ 2 = 1; 3 ^ 2 = 9; 7 ^ 2 = 49; 11 ^ 2 = 121. ஆக அடுத்து வர வேண்டியது = 13 ^ 2 = 169. |
|
|
|
|
|
|
|