கணிதப் புதிர்கள்
1. ராமு தம்பதியினருக்கு ஐந்து மகன்கள். ஒவ்வொரு மகனுக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் என்றால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

2. ஒரு கூடையில் ஐந்து மாம்பழங்கள் இருந்தன. ராஜூ அவற்றை ஐந்து சிறுவர்களுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தான். அப்படியும் ஒரு பழம் கூடைக்குள் இருந்தது, எப்படி?

3. ஒரு வியாபாரி ஒரு வெங்காய மூட்டை வாங்கினார். அவர் வாங்கியதும் அதன் விலை 25% அதிகரித்து விட்டது. ஆனால் விற்கும்போது அதன் விலை 25% சரிந்து விட்டது. அவனுக்குக் கிடைத்தது லாபமா, நட்டமா?

4. சந்தைக்குப் போன சண்முகம் 1000 ரூபாய் கொடுத்து வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாங்கினார். வீட்டுக்கு வந்து பார்த்த போது அவற்றின் எண்ணிக்கை மொத்தம் ஆயிரமாக இருந்தது. அப்படியென்றால் ஒவ்வொன்றிற்கும் அவர் எவ்வளவு செலவழித்திருப்பார்?

5. 1, 9, 49, 121, வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com