விஜய் ஆண்டனிக்கு விருது இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் நூலகம்
|
|
|
|
'ஸ்மைல் பிங்கி' - இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதில் மிகச் சிறப்பாக நடித்து பார்வையாளர்களையும், விருதுக் குழுவினரையும் கவர்ந்தவர் பிங்கி என்னும் சிறுமி. உத்திரபிரதேசத்திலுள்ள ராம்பூர் தபாய் கிராமத்தைச் சேர்ந்தவர். மிக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை கிராமத்தில் பழ வியாபாரம் செய்கிறார். பலரது வற்புறுத்தலினால் குறும்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் பிங்கி.
ஆஸ்கர் விருது கிடைத்தவுடன், அவரது மேற்படிப்புக்கு உதவிகள் செய்வதாகவும், ராம்பூர் தபாய் கிராமத்தை வசதிகள் நிறைந்த மாதிரி கிராமமாக மாற்றுவதாகவும் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் எனப் பலரும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவையெல்லாம் இப்போது காற்றோடு பறந்து விட்டன. வறுமை காரணமாக, உடல்நலமில்லாத தாய்க்கு உதவியாக ஆடு மேய்ப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளைச் செய்து வருகிறார் பிங்கி. இதனால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. “எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை யாரும் நிறைவேற்றவில்லை” என்கிறார் பிங்கியின் தந்தை ராஜேந்திரா. |
|
அரவிந்த் |
|
|
More
விஜய் ஆண்டனிக்கு விருது இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் நூலகம்
|
|
|
|
|
|
|