Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
முட்டைக்கோஸ் ஸ்வீட், காரம்!
முட்டைக்கோஸ் வடை
சமையல் தந்திரங்கள்
- ராதா மோகன்|ஆகஸ்டு 2009|
Share:
* சாம்பார் நல்ல நிறமாக இருக்க, ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து சாம்பாருடன் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

* ரசம் கொதித்து வரும்போது நன்றாகப் பொடித்த மிளகு, சீரகம் கலந்த பொடி ஒரு ஸ்பூன் தூவி இறக்கவும். மணமும் சுவையும் ஊரைக் கலக்கும்.

* வெண்டைக்காய் பொரியல் உதிரியாக வர வேண்டுமா? வெண்டைக்காய் பாதி வதங்கியவுடன் உப்பு சேர்த்து பின் இறுதியில் பொட்டுக் கடலை, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை மூன்றையும் மிக்ஸியில் பவுடராக்கி, பொரியலில் தூவி இறக்கவும்.

* ரவா கேசரி செய்யும்போது தண்ணீருக்கு பதில் பாலைச் சேர்த்துக் கிளறினால் வித்தியாசமான சுவையுடன் மிக நன்றாக இருக்கும்.

* இட்லி பூப்போல வர வேண்டுமா? அரிசி, உளுந்து இரண்டையும் ஃப்ரிட்ஜில் மூன்றுமணி நேரம் ஊற வைத்து, பின் அந்தக் குளிர்ந்த நீரையே பயன்படுத்தி மாவு அரைத்தால் இட்லி மெத்து மெத்தென்று இருக்கும்.

* குக்கரில் சாதம் வைக்கும்போதே பாத்திரத்தின் மேல் தட்டில் புளியை ஒரு சிறு கிண்ணத்தில் வைத்துவிட்டால் புளி கரைக்க சுலபமாக இருக்கும்.
ராதா மோகன், டெக்ஸாஸ்
More

முட்டைக்கோஸ் ஸ்வீட், காரம்!
முட்டைக்கோஸ் வடை
Share: 




© Copyright 2020 Tamilonline