இஞ்சி ரசம் சீரக ரசம் ஸுக்கினி மசியல்
|
|
|
|
தேவையான பொருட்கள் தக்காளி - 1 பைனாப்பிள் சாறு - 2 மேசைக் கரண்டி (அ) பைனாப்பிள் துண்டங்கள் பச்சை மிளகாய் - 2 (நுனி கீறியது) ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி கடுகு - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயம் - சிறிதளவு நெய் - சிறிதளவு (தாளிக்க) கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி |
|
செய்முறை 3 கிண்ணம் தண்ணீரில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ரசப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க விடவும். தக்காளி நன்கு வெந்து பொடி வாசனை போன பின்னர் வெந்த துவரம் பருப்பு, முக்கால் கிண்ணம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பொங்கும் முன் அடுப்பை அணைக்கவும். பின் கடுகு, பெருங்காயம், நெய்யில் தாளித்துப் போடவும். கொத்தமல்லி சேர்க்கவும். ரசம் சிறிது ஆறியபின் 2 மேசைக்கரண்டி பைனாப்பிள் சாறு சேர்த்துக் கலக்கவும். அல்லது ரசம் கொதிக்கும் போது பைனாப்பிள் துண்டுகளைச் சேர்த்தும் செய்யலாம். சுவையான, வாசனை மிக்க ரசம்!
- லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா |
|
|
More
இஞ்சி ரசம் சீரக ரசம் ஸுக்கினி மசியல்
|
|
|
|
|
|
|