பொங்கலோ பொங்கல் புதுப்புது பொங்கல் பால்பழப் பொங்கல் அவல் சர்க்கரைப் பொங்கல் முப்பால் பொங்கல் சேமியா பொங்கல் அவல் பொங்கல் ரவா புளிப்பொங்கல் சுக்கினி பொங்கல்
|
|
|
|
தேவையான பொருட்கள்
சேமியா - 2 கிண்ணம் வெல்லம் - 1 1/4 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் முந்திரிப் பருப்பு - சிறிதளவு உலர்திராட்சை - சிறிதளவு நெய் - 1 மேசைக்கரண்டி ஏலப்பொடி - 1 சிட்டிகை |
|
செய்முறை
வாயகன்ற ஒரு பாத்திரத்தில் 3 கிண்ணம் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதித்தவுடன் இதில் சேமியாவைப் போட்டுக் கிளறி உடன் அடுப்பை அணைத்துப் பாத்திரத்தை மூடிவிடவும். சிறிது நேரம் கழித்து வெல்லத்தை கெட்டிப் பாகு வைத்து அதில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.
வெந்த சேமியாவைத் தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். சேமியாவைப் பாகில் போட்டு நெய்யைச் சேர்த்து நன்கு கிளறவும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். அதிகம் கெட்டியாக இருந்தால் வடித்து வைத்த சேமியா வெந்த தண்ணீரை வீணாக்காமல் விட்டு நெகிழ்த்திக் கொள்ளலாம். பின்னர் ஏலப்பொடி, வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துக் கிளறிச் சூடாகச் சாப்பிடவும்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |
|
|
More
பொங்கலோ பொங்கல் புதுப்புது பொங்கல் பால்பழப் பொங்கல் அவல் சர்க்கரைப் பொங்கல் முப்பால் பொங்கல் சேமியா பொங்கல் அவல் பொங்கல் ரவா புளிப்பொங்கல் சுக்கினி பொங்கல்
|
|
|
|
|
|
|