பஜ்ஜி வகைகள் வெண்டைக்காய் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி ஆப்பிள் பஜ்ஜி அஸ்பாரகஸ் பஜ்ஜி முட்டை பஜ்ஜி இட்டலி மாவு பஜ்ஜி பன்னீர் பஜ்ஜி
|
|
|
தேவையான பொருட்கள்
அதிகடின (Extra firm) டோ ஃபூ - 1/2 பாக்கெட் கடலை மாவு - 1 கிண்ணம் சோள மாவு - 1 மேசைக்கரண்டி மைதா மாவு - 1 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு |
|
செய்முறை
டோ ஃபுவில் உள்ள தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும். அதை மெல்லிய துண்டுகளாக நீள வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
எண்ணெய் நீங்கலாக எல்லாப் பொருட்களையும் கரைத்துக் கொண்டு, இந்த மாவில் டோ ஃபூ துண்டங்களை இருபுறமும் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக எடுக்கவும். வடிய வைத்துக் கொள்ளவும்.
ஈரடுக்கு டோ ஃபு பஜ்ஜி கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி ஆம்சூர் - 1 தேக்கரண்டி
மேற்கண்ட இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். இந்த கலவையை இரண்டு டோ ஃபு துண்டுகளுக்கு நடுவே தடவி, சற்று அழுத்தி, பிறகு மாவில் தோய்த்து முன்போல் செய்யவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
பஜ்ஜி வகைகள் வெண்டைக்காய் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி ஆப்பிள் பஜ்ஜி அஸ்பாரகஸ் பஜ்ஜி முட்டை பஜ்ஜி இட்டலி மாவு பஜ்ஜி பன்னீர் பஜ்ஜி
|
|
|
|
|
|
|