ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தொடரும் சேவை பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை குளுகுளு சிறைச்சாலை பி. சுசீலாவுக்கு பத்மா விருது ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
|
|
விண்வெளி வீராங்கனையின் வருகை |
|
- அரவிந்த்|அக்டோபர் 2007| |
|
|
|
சுனிதா வில்லியம்ஸ். மக்களால் மறக்க முடியாத பெயர். அட்லாண்டிஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து அதிக நாட்கள் (195 நாட்கள்) இருந்து சாதனை படைத்த இந்திய வம்சாவளிப் பெண்ணான சுனிதா வில்லியம்ஸ் ஒரு வாரச் சுற்றுப் பயணமாக கடந்த 20ஆம் தேதியன்று இந்தியா வந்தார். முதலில் அஹமதாபாத் வந்தடைந்த அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற அவர், பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கல்லூரி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசினார்.
சுனிதா வில்லியம்ஸ் செய்தது மிகப் பெரிய சாதனை என்றும் அவரால் இந்தியா பெருமை அடைகிறது என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அடுத்து ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள 58-வது சர்வதேச விண்வெளி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், தனது விண்வெளிப் பயண அனுபவங்களை அங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்வாரென்று தெரிகிறது.
நாசா நிர்வாகி மைக்கேல் கிரிபின்னும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |
|
அரவிந்த் |
|
|
More
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தொடரும் சேவை பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை குளுகுளு சிறைச்சாலை பி. சுசீலாவுக்கு பத்மா விருது ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
|
|
|
|
|
|
|