காது கேளாதது ஒரு தடையல்ல 'நியூஸ்வீக்'கில் மாயாவதி மேஜர் ரகுராமனின் தியாகம்
|
|
சபாஷ் ஓடந்துறை! |
|
- அரவிந்த்|நவம்பர் 2007| |
|
|
|
மின்வெட்டு. இந்தியாவில் எங்குமே தவிர்க்க முடியாத ஒன்று. குறிப்பாக கோடைக்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் மின்வெட்டு நிகழலாம். ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள ஓடந்துறை கிராம மக்கள் மின்வெட்டு என்பதை அறிய மாட்டார்கள். காரணம் அவர்கள் தாங்களே மாற்று எரிசக்திகளான பயோமாஸ் மற்றும் காற்றாலை மூலம் தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக் கொள்கின்றனர். இங்கு ஒரு மணிக்கு 6 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனையும் செய்கின்றனர். மேலும் மின்சாரம் மூலம் பவானி ஆற்றின் நீர் எடுக்கப்பட்டு, பாக்டீரியா நீக்கப்பட்டு, சுத்தம் செய்யப்படுகின்றது. இந்நீரையே அந்த ஊரில் உள்ள 1550 குடும்பங்களும் பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தும் அரசின் உதவியின்றி மக்களின் கூட்டு முயற்சியாலேயே சாத்தியமாகியிருக்கிறது. காற்றாலை அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாய் வரை வங்கியிலிருந்து கடன் பெற்று, அதனைத் தற்போது திருப்பிச் செலுத்தியும் வருகின்றனர். சபாஷ் ஓடந்துறை! |
|
அரவிந்த் |
|
|
More
காது கேளாதது ஒரு தடையல்ல 'நியூஸ்வீக்'கில் மாயாவதி மேஜர் ரகுராமனின் தியாகம்
|
|
|
|
|
|
|