Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
இளமை கொலுவிருக்கும் உற்சவம்
நளினமான நடனவிழா - லாஸ்யாவின் பத்தாம் ஆண்டு நிறைவு
- அருணா|ஜூலை 2002|
Share:
Click Here Enlargeஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் பிரபலமான 'லாஸ்யா' நாட்டியப் பள்ளியின் இயக்குனர் திருமதி வித்யா சுப்ரமணியன் அவர்களும், அவரது இளம் மாணவியரும், ஜூன் மாதம் 16ம் நாள், ஞாயிறு மாலையில், தமது நாட்டியப் பள்ளியின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் மிகச் சிறந்ததோர் நாட்டிய நிகழ்ச்சியை, foothill college smithwick தியேட்டரில் வழங்கி னார்கள். 'லாஸ் யா' என்ற சொல்லுக்கு 'graceful dance' என்று ஆங்கிலத்திலும், 'நளினமான நடனம்' என்று தமிழிலும் பொருள் கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற நடனங்கள் நளினமாக இருந்ததோடு மட்டுமல்லாது, தாளககட்டுடன் 'விறுவிறுப்பாகவும் அமைந் திருந்தன. திருமதி வித்யா அவர்கள், நாட்டிய உலகில் புகழ்பெற்ற டாக்டர் பத்மா சுப்ரமணியம், பாரம்பரியம் மிக்க வழுவூர் நடனபாணியில் கைதேர்ந்த கலைஞர் சுவாமிமலை திரு. ராஜரத்னம் பிள்ளை, மற்றும் அபிநயத்தில் சிறப்பிடம் பெற்ற திருமதி. கலாநிதி நாராயணன் ஆகியோரிடம் தக்க பயிற்சி பெற்று, நடனக்கலையில் தேர்ந்த வித்தகியாகத் திகழ்கிறார். இவர் 'லாஸ்யா' நாட்டியப் பள்ளியை 1991ம் ஆண்டில் நிறுவி, தற்போது ஸன்னிவேல்/கூப்பர்டினோ பகுதியில் 70க்கும் மேற்பட்ட மாணவியர்களுக்கு நடனப் பயிற்சியளித்துக் கலைச்சேவை புரிந்து வருகிறார்.

பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில், ஏழெட்டு வயதே நிரம்பிய இளம் மாணவி யரிலிருந்து, தக்க பயிற்சி பெற்று அரங்கேற்றம் செய்துள்ள இளம் பெண்கள் வரை பல நடனமணிகளுடன் திருமதி வித்யாவும் நடனம் புரிந்து ரசிகர்களை மகிழ்வித்தார். புஷ்பாஞ் சலியில் துவங்கி, தில்லனா வரை நடனங்கள் அனைத்தும் கண்களையும் கருத்தையும் கவரும் வகையில் சிறப்புற அமைந்தன. உள்ளத்தைக் குழைய வைக்கும் நீலாம்பரி ராகத்தில் திருமதி ஆஷா ரமேஷ் இனிய குரலில் இசைத்த 'சிருங்கார லஹரி' பாடலுக்கு வித்யாவின் நளினமான நடனம், 'லாஸ்யா' என்ற சொல்லுக் கான பொருளை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. பரதநாட்டியத்திற்கே உரித்தான 'polyrhythms' எனப்படும் தாள வரிசையமைப்பை சிறப்பாக எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது 'ஜதிலய சாரம்' என்னும் நடனம். இந்த விறுவிறுப்பான நடனத்தில் நடன நங்கையரின் சலங்கை ஒலியும், திரு நாராயணனின் மிருதங்கம், திரு ரவி குடாலாவின் தபலா, திரு ராமநாத் ராமதாஸின் கடம் ஆகியவற்றின் நேர்த்தியான தாள ஒலியும், திருமதி மீனாட்சியின் 'கணீர்' என்ற நட்டுவாங்கமும் இணைந்து ரசிகர்களை மகழ்ச்சியில் திளைக்க வைத்தன. திருமதி வித்யா அவர்கள் தமது நடன நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் ஏதேனும் புதுமையைப் புகுத்துவதில் கைதேர்ந்தவர். பஞ்சதந்திரக் கதைகளுக்கு இளம் நடனமணிகள் சிறப்பாக நடனமாடி உயிரூட்டினர். ரசிகர்கள் மத்தியி லிருந்த இளம்தலைமுறையினருக்கு இக்கதை களை எளிதில் புரிந்து கொள்ள முடிந்ததால், இந்நடனங்களைப் பெரிதும், ரசிக்க முடிந்தது. இக்கதைகளை நாட்டியப்படுத்துவதற்கு திருமதி வித்யா 'fusion' இசையைப் பயன்படுத்தியது அவரது சிருஷ்டித் திறனைக் காட்டுகிறது. கதைகளுக்குப் பின்னணியாக அமைந்த மேடையமைப்பு, மழை, மின்னல் ஆகியவற்றை வெளிப்படுத்திய ஒளி, ஒலியமைப்புகள் இவற்றிற்கு ஒரு தனி சபாஷ்!
பாரம்பரிய பரதநாட்டிய நடனங்களுக் கிடையே 'fusion' இசையோடு கூடிய பஞ்சசதந்திரக்கதை நடனங்களம், 'folk' இசையுடன் கூடிய 'ராசக்கிரீடை' நடனமும் இணைந்தவிதம் புதுமையாகவும் ரசிக்கத்தக்க தாகவும் இருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. திருமதி சாந்தி நாரயாணனின் வயலினும், திருமதி ரஞ்சனி நரசிம்மனின் புல்லாங்குழலும் பாடல்களுக்கு நல்ல இனிமை யேற்றின.

கைதேர்ந்த கலைஞர் வித்யா அவர்களின் நேர்த்தியான நடனமும், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களின் எழிலான நடனமும், 'லாஸ்யா' விற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதைப் பறை சாற்றின. பெற்றோர்களின் பெருமையான புன்னகைகளும், நல்ல நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம் என்ற ரசிகர்களின் நிறைவான புன்னகைகளும் நிகழ்ச்சியின் வெற்றிக்குச் சான்று!

அருணா
More

இளமை கொலுவிருக்கும் உற்சவம்
Share: 




© Copyright 2020 Tamilonline