வாழ்த்துக்கள் விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய தமிழ் இசை விழா 'பாவாணர்' நூற்றாண்டு விழா & 15வது தேசிய தமிழ் மாநாடு
|
|
22 ஆம் வயதில் மன்றம் - ஓர் அலசல் |
|
- தமிழன்|ஆகஸ்டு 2002| |
|
|
|
1980 ஆம் ஆண்டில் துவங்கிய விரிகுடாப்பகுதி தமிழ் மன்றத்திற்கு இது இருபத்திரண்டாம் ஆண்டு. பள்ளிப்படிப்பும், கல்லூரிப்படிப்பு முடித்து மன்றம் ஒரு பட்டம் பெற்று விட்டது என்றே கூறலாம். சென்ற ஆண்டின் மன்றம் ஆற்றிய பணிகளை சற்றே திரும்பிப் பார்க்கையில் “ஆ” என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆண்டின் துவக்கம் அமர்க்களமாக கூட்டாஞ்சோறு (Picnic) நடத்தி, அதற்கு அடுத்த வாரமே இந்திய சுதந்திர தின விழாவில், மாமல்லபுர கோவிலையும், மதுரை தேரையும் ஒரு லாரி (truck) க்குள் கொண்டு வந்த அழகு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆண்டு தோறும் நடக்கும் இவ்விழாவில் இத்தனை நாள் தமிழகத்திற்கு என்று ஒரு அலங்கார ஊர்தி இல்லாத குறை பறந்துவிட்டது. இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக விரிகுடாப்பகுதி குழந்தைகளும் பெரியவர்களும் நடனமாடி மக்களை மகிழ்வித்தார்கள்.
வெறும் கேளிக்கைகளுக்கு மட்டும் அல்ல என்பது போல் சுதந்திர தின விழா முடிந்த மறு வாரமே ‘தன் நிகரில்லா குறள்’ என்ற பொருளில் இலங்கை அறிஞர் திரு சிவதாசன் அவர்கள் சொற்பொழிவாற்றினார். இயலுக்கு இசை ஈடு கொடுக்க அடுத்த தமிழிசை ம்நிகழ்ச்சி திருமதி சுகுணா புருஷொத்தமன் குரல் வழி தேனாக தமிழன்பர்கள் காதில் ஒலித்தது. பாட்டுக்கு மேல் தமிழ் பாடலாக அவர்கள் பாட, நேரம் இல்லாத ஒரே காரணத்தால் தான் நிகழ்ச்சி முடிவுற்றது. நம்ப மாட்டீர்கள் நம் மன்றத்தின் அங்கத்தினரை இணைப்பது குழந்தைகள் தான் என்றால்! குழந்தைகள் தமிழ் பேச வேண்டும், கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல பெற்றோர் மன்ற அஙத்தினர் ஆகின்றனர். இந்த ஆண்டு இரண்டு குழந்தைகள் நிகழ்ச்சிகள் நடந்தன. குளிர் வந்து இலை உதிருமுன்னே ஏறக்குறைய நூறு குழந்தைகள் இருபது குழுக்களாக பல்சுவையில் நம்மை மகிழ்வித்தனர்.
பொங்கல் விழாவை முத்தமிழ் விழாவாக கொண்டாடினோம். இயலுக்கு திரு மதுர பாரதி நடுவராக பட்டி மன்றம் ‘தமிழை குழந்தைகள் மேல் திணிக்கலாமா இல்லையா?’ என்று சுவையுடன் ஆய்ந்தது. இசைக்கு ‘பல்லவி’ பிரபு மற்றும் குழுவினர் மெல்லிசை விருந்தாக கடைசி வரை ஒருவர் கூட எழாமல் ரசிக்கும் வகையில் சிறப்பாக அமுதூட்டினர். நாடகம் முற்றிலும் புதிதான பாணியில், பாரதியின் கவிதையே உரையாக, பாஞ்சாலி சபதம் பாரதி நாடக மன்றத்தால் வழங்கப்பட்டது. கண் கொள்ளா வண்ண உடைகளும், அரங்கமைப்பும் இதன் சிறப்பு. குறுகிய காலத்தில் இதை தொகுத்து அரங்கேற்றிய திறன் பாரதி நாடக மன்றத்தையும் திரு மதுர பாரதியையும் சேரும்.
தமிழின் சிறப்பு இலக்கியங்கள். சமூகத்தின் சிறப்பு மகளிர். இவற்றை இணைத்து ‘தமிழ் இலக்கியத்தில் மகளிர் பங்கு’ என்ற தலைப்பில் டாக்டர் ஹார்ட் அவர்களும் திரு மதுரபாரதி அவர்களும் சிறப்புரை வழங்கினர் அடுத்த நிகழ்ச்சியில். அவ்விருவரும் சிறப்பு விருது அளித்து கௌரவிக்க பட்டார்கள்.
அடுத்த சிறுவர்கள் விழா, வசந்த விழாவாக அமைந்தது. இரு நூறுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருபத்தொரு குழுக்களாக ஐநூறுக்கு மேலான ரசிகர்களை மகிழ்வித்தனர். நானூறே மக்கள் கொள்ளும் அரங்கில், ‘இசை இல்லை இருக்கை’ (musical chair) போல இந்த சாதனையை செய்தவர்கள் திறமை வியக்கத் தக்கது. நேரத்தில் தொடங்கி நேரத்தில் முடிந்த பல இந்த ஆண்டு நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று! அடுத்த வாரமெ, வாரத்திற்கு வாரம் வித்தியாசம் என்பதைப் போன்று, ஒரு தமிழர் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப் பட்டது. இதில் தமிழில் தொழில்நுட்பம் மற்றும் சிறுகதை பற்றி வந்திருந்தவர்கள் கலந்துரை யாடினார்கள். இதில் கலந்து கொண்டவர்களில் சிலர் தென்றல் கதை எழுத்தாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சான் ஓசே நூலகத்தில் தமிழ் பிரிவு பலருக்கும் தெரிந்திருக்க கூடும். சில ஆண்டுகளுக்கு முன், மன்றமே பல தமிழ் புத்தகங்களை திரட்டி இந்த நூலகத்திற்கு நன்கொடையாக அளித்தது. நூலகத்துடன் சேர்ந்து முதன் முறையாக “பல்சுவை நிகழ்ச்சி” மே 18 ஆம் தேதி நூலக வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக சமையல் போட்டி, mimicry, சிறுவர் கதை, தமிழ் பண்ணிசை, நாட்டுப்புறபாடல்கள் போன்றவற்றை பல மன்ற உறுப்பினர் வழங்கி மகழ்ந்தனர்.
குழந்தைகளோடு நின்று விடாமல், பெரியவர் களுக்கான அடுத்த நிகழ்ச்சி பல்சுவை நிகழ்ச்சி. இதில் திரு மணிவண்ணன் அவர்கள் தமிழில் Information Technology என்ற பொருளில் சிற்றுரை ஆற்றினார். சான் ஹோசே நூலகம் நம் மன்றத்திற்கு ஒரு பாராட்டிதழ் வழங்கி, ஒரு நாள் நூலகத்தில் தமிழ் கலாச்சார நிகழ்ச்சி நடத்த இடமும் அளித்தனர். அன்று சமையல் போட்டி, mimicry, சிறுவர் கதை, தமிழ் பண்ணிசை, நாட்டுபாடல்கள் போன்றவற்றை பல மன்ற உறுப்பினர் வழங்கி மகழ்ந்தனர். |
|
எல்லவற்றிற்கும் சிகரமாக, சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் வரை சிரிக்க வைத்த கிரேசி மோகன் குழுவின் நகைச்சுவை நடகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் சிரிப்புடன் இனிதே முடிந்தன. இந்த நாடகங்களின் இரண்டு கட்சிகளும் House Full. இந்த நிகழ்ச்சியில் திரண்ட நிதியிலிருந்து $5000, அண்மையில் Foster city ல் நடைபெற இருக்கும் தமிழ் Internet Conference க்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளொடு மட்டும் நிற்காமல், சட்ட அமைப்பில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அடுத்த ஆண்டு முதல் தமிழ் மன்றத்தின் செயல் ஆண்டு காலண்டர் ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. வருமான வரி மனு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நம் மன்றம் ஒரு Non-profit இயக்கம். இந்த நிலை பதுகாக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மன்றத்திற்கு கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு என்பதை மகிழ்வுடன் அறிந்து கொள்ளுங்கள்.
ஜூன் 29 ஆம் தேதி நடந்த தேர்தலில், திரு சிவா சேஷப்பன் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சிவா ஷன்முகராஜா, மொலி விருஞ்சிபுரம், சுரேஷ் கிருஷ்ணன், சாந்தி கதிரேசன், சுமதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் மன்றத்தின் குழுவிற்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்கள். சிவா மற்றும் குழுவினர் திறம்பட செயல்பட வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்க மன்றத்திற்கு விளம்பரம் கொடுத்து உதவிய பெருமை “Mostly தமிழ்” வானொலி நிகழ்ச்சிக்கும், தென்றல் மாத இதழுக்கும் செரும். அவர்களுக்கு மன்றத்தின் அன்பான வாழ்த்துக்கள். நன்றி.
வாழ்க மன்றம்!! வளர்க அதன் தொண்டு!!
மன்றத்தைப் பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள்?
காந்தன் - கிரேசி மோகன் குழுவின் இயக்குனர்
“It is the most sincere planning and meticulous execution of your team that brought rich dividends on the Drama day and gave a fitting finale to our memorable trip - USA -2002.”
“தென்றல்” வெங்கட்ராமன்
“The community today anticipates programs by Tamil Manram every now and then and for resources and references as well. This transformation is quite a milestone in the history of the Tamil Manram.”
நீனா சாப், சான் ஓசே நூலக அலுவலர்
“I thought that the event (variety entertainment show) was a great success. I am glad that the library could be part of it.”
தமிழன் |
|
|
More
வாழ்த்துக்கள் விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய தமிழ் இசை விழா 'பாவாணர்' நூற்றாண்டு விழா & 15வது தேசிய தமிழ் மாநாடு
|
|
|
|
|
|
|