|
குறுக்கெழுத்துப் புதிர்: ஆகஸ்டு 2007 |
|
- வாஞ்சிநாதன்|ஆகஸ்டு 2007| |
|
|
|
தமிழுக்கு நல்ல காலம்தானா?
ஜூலை 2007 புதிரில் "மயக்கத்தில் இடை விட்டுக் கலக்க, நாரும் ஊரும் ஒன்று (5)" என்ற குறிப்பைத் தொடர்ந்து சில எண்ணங்கள்: நகர் என்றால் ஊர் (வினைச் சொல்) நகர் என்றாலும் ஊர்தான்! (பெயர்ச்சொல்). வினைச்சொல், அசைந்து இடம் மாறும் செயலைக் குறிக்கும். எனவே நகர்வது என்பது ஊர்வது (அது சரி, சென்னையில் நகரச் சொல்வதேயில்லை. ஓத்து, இல்லை தள்ளுதான்). கருநாகம் ஊரும் ஒரு ஜந்து.
நல்ல பாம்பு என்று சொல்வதே இந்த கருநாகத்தைத்தான். அது பாம்பின் நற்குணச் சான்றிதழ் அல்ல. ஒரு காலத்தில் தமிழில் நல்ல என்றால் கரிய நிறமான என்று பொருள். நல்ல மிளகு என்பது black pepper அதன் தரத்தைக் குறித்ததல்ல.
நல்லெண்ணெய் என்பதும் நிறத்தைக் குறித்தே. ஆனால் இந்த பொருளில் இப்போது தெலுங்கில் தான் 'நல்ல' புழங்கி வருகிறது. இது தமிழுக்கு நல்ல காலம்தானா?
vanchinathan@gmail.com
குறுக்காக
1. சிவந்த மாலை மஞ்சள் நிறத்திலிருக்கும்! (5) 4. கட்டு கட்டாமலிருந்தால் வருமானம் மிச்சம்தான் (2) 6. முறுக்கிய இழை எது? புதிராக இருக்கும் (4) 7. ஒரு வெளிநாட்டிற்கு அன்ன ஜந்து சிரச்சேதம் (4) 9. சலிப்பைத் தராத எதிர் வேகம் விசிறும் தட்டா? (5) 12. வயல்காரா! அண்ணி கடைசியாகக் கையில் இடுவது (4) 14. மண்ணரசி பூவின் முனை கிள்ளி எதிர்ப்புறமாய் நேர்நேர் செருகினாள் (4) 17. திருப்பணி தொடங்கியதும் நிறைவை அடை (2) 18. கூவித்திட்டுபவர் ஆரம்பித்து வைத்திருப்பது (5)
நெடுக்காக
1. ஓர் உலோகமே பாத்திரம் (3) 2. நேரான கணவனைப் பற்றிய காப்பியம்? (5) 3. பாதித் திருநாளை ஆழ்ந்து அனுபவி (2) 4. ஆற்றல் படைத்த காவல் லக்ஷ்மணனுக்கு அடங்கியது (3) 5. முத்தமிடும் இடத்திற்கு முதல் கண்ணின் தடயம் (4) 7. தழும்பில்லா வண்டு நுழைய மரியாதையில்லாமல் வெளியேறு ஒரு தின்பண்டத்திற்கு (3) 8. மலர்ந்ததும் மல்லிகையில் மூக்கைத் துளைத்து வருவது (4) 10. மறைந்து வெடிக்கும் விழியாள் (3) 11. இடையில்லாமல் பாண்டியன் முன்னே ஆடிய மாதர் பாடுவது சம்பூர்ணமானது (5) 13. பெண் உடுத்துவது குரங்கு வேலை செய்யும் நகை (3) 15. ஒரு துண்டைப் பிய்த்துக் கடை வீட்டு முன்னே ஆகாயம் (3) 16. வேகவைக்கும், இல்லாவிட்டால் உடலை வேகவைக்கவேண்டியதுதான் (2)
வாஞ்சிநாதன் vanchinathan@gmail.com |
|
புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது இங்கு பார்க்கவும்.
ஜூலை 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்குறுக்காக: 3. அரசு 5. கத்தி முனை 6. வைரி 7. ஊதாரி 8. கருநாகம் 11. செதுக்கிய 12. சேகரி 14. தேவா 16. கும்பிட்டு 17. சிரம் நெடுக்காக: 1. மகத்தானது 2. உதிரி 3. அனைவரும் 4. சுவை 9. களை கட்டும் 10. தகிக்கும் 13. லிபியா 15. வாசி
ஜூலை 2007 புதிர் மன்னர்கள்
1. வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி. 2. விஜயா அருணாசலம், ·ப்ரிமோண்ட், கலி. 3. ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ·ப்ரிமோண்ட், கலி. 4. மீ. முத்து சுப்ரமண்யம், அட்லாண்டா 5. சுமித்ரா ஜெய்சங்கர், ·ப்ரிமோண்ட், கலி. 6. சிங்காநல்லூர் கணேசன் ·ப்ரிமோண்ட், கலி.
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
புதிர் விடைகள் அடுத்த மாத (செப்டம்பர் 2007) இதழில் வெளிவரும். |
|
|
|
|
|
|
|