Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நிதி அறிவோம் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
ஜூலை 2007: குறுக்கெழுத்துப்புதிர்
- வாஞ்சிநாதன்|ஜூலை 2007|
Share:
Click Here Enlargeகுறுக்காக

3. நின்று கொல்லத் தெரியாதது (3)
5. முகத்தினை கோணலாக்கிக் காட்டலாம், மிரட்டித் திருடுவதற்கு (3, 2)
6. எதிரி பசுவை ரிஷிகளிடம் காணலாம் (2)
7. சிக்கனத்தைக் கடைப்பிடிக்காதவர் ஒரு வண்ண ஸ்வரம் சேர்த்தார் (3)
8. மயக்கத்தில் இடை விட்டுக் கலக்க, நாரும் ஊரும் ஒன்று (5)
11. சிற்பி செய்த செங்கல் தொடங்கியும் தொடங்காமல் ஆக்கியது குழப்படிதான் (5)
12. சேனைத் தலைவனே! யானை திரட்டு (3)
14. கடவுளே ஆதியும் அந்தமுமாகிய தேசப்பிதாவா... (2)
16. ...கைகூப்பி பக்தனுக்கும் பிட்டுக்கும் அடக்கி வைப்பது (5)
17. மலையுச்சி தேய உடலுச்சி (3)

நெடுக்காக

1. இமயம் போன்றது மனது உள்ளே மோகத்தால் தலைகால் புரியாமல் போனது (6)
2. மொத்தத்தில் சேராத குற்றமற்ற வழுதி தோலையெடு வெளியே (3)
3. எல்லோரும் குறையுள்ள அவனை அடைந்திட வரும் (5)
4. உணவில் ரசிப்பதற்குத் தேவையானது (2)
9. பிரகாசமடையச் செய்யும் வயலில் வேண்டாதது கயிற்றின் வேலை செய்யும் (2, 4)
10. இலக்கியத்தை ஒழித்த பாதகிக்கும் அனல் அடிக்கும் (5)
13. வட ஆப்பிரிக்க நாட்டுக்கு வட மொழி எழுத்தா? (3)
15. முழுதாக மூச்சு விடாமல் படி (2)
புதிர் அரசிகள்

ஜூன் மாதப் புதிருக்கு எட்டு பேர் சரியான விடையை அனுப்பியிருந்தார்கள். ஆனாலும் முதல் மூவர் என்ற கொள்கையின்படி விஜயா அருணாசலம், அருணா ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி ஷங்கர் என்ற மூவரும் புதிர் அரசிகளாக அறிவிக்கப்படுகிறார்கள்.

அப்புதிரில் சில பூதங்கள் கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்தன. குமிழி என்ற விடையைக் கண்டு பிடித்தும், எப்படி என்று ஒரு கேள்வி மின்னஞ்சலில் வந்தது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் மற்றொரு பூதமான காற்று நுழையும் போது குமிழியாக வரும் என்பதன் அடிப்படையில் அது அமைக்கப்பட்டிருந்தது.

அடுத்த பூதமான நிலத்தைத் தோண்டக் கிடைக்கும் பொக்கிஷமான 'புதையல்' என்பதற்கான குறிப்பில் 'மறிக்கப்பட்ட' என்று தவறாக (மறைக்கப்பட்ட என்று இருந்திருக்க வேண்டும்) வெளியிட்டிருந்தும் எல்லோரும் சுதாரித்துக் கொண்டு சரியான விடையைக் கூறியிருந்தீர்கள்.

குமார் ராமசுப்ரமணியன் என்ற முந்நாள் புதிர் மன்னர் 'மூப்பு' என்ற விடையை (கண்ணில்) திரை விழும் பருவம் என்று குறிப்பிட்டார். இந்த விளக்கம் எனக்குப் புதிதே. 'திரை' என்றால் சுருக்கம் (wrinkles) என்று ஒரு பொருள். "நரையும் திரையுமாய்" என்ற பிரயோகம் வெறும் எதுகைக்கு வந்ததல்ல. கடலில் தோன்றும் 'அலை' என்ற 'சுருக்கம்' திரை என்று பழந்தமிழில் கூறப்படுவதை "திரை கடலோடியும் திரவியம் தேடு" என்ற பழமொழியில் தெரிந்து கொள்ளலாம். 'அலை'க்குத் 'திரை' என்ற சொல்லே மலையாளத்திலும் கன்னடத்திலும் புழங்குகிறது என்பதை அம்மொழி பேசும் நண்பர்கள் மூலம் அறிந்து வியப்படைந்தேன். இத்துடன் இம்மாதக் கதையில் திரை விழுகிறது.

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

புதிருக்குப் புதியவரா?

செய்முறையை அறிய இங்கே சொடுக்கவம்.

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஜூலை 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. ஜூலை 25க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

ஜூன் 2007 புதிர்அரசிகள்
Share: