அல்வா வகைகள் - I பாதாம் அல்வா அசோகா அல்வா பீட்ரூட் அல்வா
|
|
|
தேவையான பொருட்கள்
கேரட் - 4 சர்க்கரை - 2 கிண்ணம் நெய் - 1 கிண்ணம் பால் - 2 கிண்ணம் ஏலக்காய் - 6 முந்திரிப் பருப்பு - 8 பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை |
|
செய்முறை
கேரட்டை நன்றாகக் கழுவித் தோல் சீவித் துருவவும். துருவலை நெய் விட்டு நன்றாக வதக்கவும்.
பின்பு வதக்கியவற்றைப் பால் விட்டு வேக வைக்கவும்.
இதற்கிடையில் ஒரு கனமான பாத்திரத்தில் சர்க்கரைப் பாகு செய்யவும். பாகு முற்றி வரும்போது அதில் வேகவைத்த கேரட்டைப் போட்டு நன்றாகக் கிளறவும். நடுநடுவே நெய் விட்டு கிளறிக் கொண்டே இறக்கவும்.
ஒட்டாமல் வரும்போது அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைக்கவும்.
பின்பு முந்திரிப் பருப்பை வறுத்துப் போடவும். கூடவே ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போடவும். அல்வா ரெடி.
தங்கம் ராமசாம |
|
|
More
அல்வா வகைகள் - I பாதாம் அல்வா அசோகா அல்வா பீட்ரூட் அல்வா
|
|
|
|
|
|
|