அல்வா வகைகள் - I அசோகா அல்வா காரட் அல்வா பீட்ரூட் அல்வா
|
|
|
தேவையான பொருட்கள்
பாதாம் - 1 கிண்ணம் சர்க்கரை - 3 கிண்ணம் நெய் - 1 1/2 கிண்ணம் பால் - 1 கிண்ணம் கேசரித் தூள் - சிறிதளவு முந்திரிப் பருப்பு - 8 பச்சை கற்பூரம் - சிறிதளவு |
|
செய்முறை
பாதாம் பருப்பைக் கொதிக்கும் வெந்நீரில் ஊற வைக்கவும்.
இரண்டு மணி நேரம் ஊறிய பின் பாதாம் பருப்பின் தோலை உரித்து, பால் விட்டு மிக்சியில் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம். பாலை விட்டு அரைக்கவும்).
இதற்கிடையில் ஒரு கனமான பாத்திரத்தில் சர்க்கரைப் பாகு வைக்கவும். பாகு முற்றியதும் ஏற்கெனவே அரைத்து எடுத்து வைத்திருக்கும் பாதாம் பருப்பு விழுதைப் போட்டுக் கிளறவும்.
கிளறிக் கொண்டு வருகையில், கூடவே நெய்யை விட்டுக் கிளறவும். நன்றாகச் சுருண்டு வரும்போது கேசரித் தூள், ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் ஆகியற்றைச் சேர்க்கவும்.
கடைசியாக முந்திரியை நெய்யில் வறுத்து மேலே தூவவும். அல்வா ரெடி. பாதாம் அல்வா ருசியானது மட்டுமல்ல, மணமானதும்கூட.
தங்கம் ராமசாம |
|
|
More
அல்வா வகைகள் - I அசோகா அல்வா காரட் அல்வா பீட்ரூட் அல்வா
|
|
|
|
|
|
|