Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பத்மஸ்ரீ டாக்டர் சரோஜினி வரதப்பன்
வெற்றிப் படிகளில்..... கிரி டிரேடிங் ஏஜென்ஸி
- நளினிசம்பத்குமார்|அக்டோபர் 2002|
Share:
Click Here Enlargeநவராத்திரி சமயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அம்பாளுக்கு அனுதினமும் பூஜை செய்ய ஆசை. ஆனால், எப்படி செய்வது என்று கவலைப்படும் மங்கையர்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. 'கிரி டிரேடிங் ஏஜென்ஸி'. நவராத்திரிக்கு என்னென்ன பூஜை செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும், பூஜை செய்வதற்கான பொருட்களையும், அழகாக கிரி டிரேடிங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

நவராத்திரிக்கு என்று மட்டுமல்லாமல், ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம், கோகுலாஷ்டமி, தீபாவளி... என அனைத்துப் பண்டிகைகளுக்கும் ஏற்றவாறு பொருட்கள் கிடைக்கும் இடம் 'கிரி டிரேடிங்'. இந்நிறுவனம் குறித்து அதன் நிர்வாகி சுப்பிரமணியன் அவர்களை சந்தித்தோம்.

கிரி டிரேடிங் ஏஜென்ஸி எங்கு எப்படி ஆரம்பிக்கப்பட்டது?

1951ஆம் ஆண்டு மும்பையின் தென்னகமென அழைக்கப்படும் மாதுங்கா நகரில் அமரர் திரு. டிவிஎஸ்.கிரி இருந்தார். தம் நண்பர் ஒருவர் அவரது மகனின் உபநயனம் (பூணூல்) கல்யாணத்திற்கு திரு. கிரியை அழைத்திருந்தார். பூணூலுக்குச் செல்லும் போது, சிறுவனுக்கு தமிழ், சமஸ்கிருதத்தில் அச்சடிக்கப்பட்ட ஸந்தியாவந்தனம்ஸ புத்தகத்தை பரிசாக கொடுக்க விரும்பி, மாதுங்கா முழுதும் தேடினார். கிடைக்கவில்லை. அது, தமிழர்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் தாமே ஏன் புத்தகக் கடையை ஆரம்பிக்ககூடாது என எண்ணி, மாதுங்கா ரயில்நிலையத்தில் ஒரு சிறிய அளவில் பக்தி புத்தகங்களை சென்னையிலிருந்து வரவழைத்து ஆரம்பித்தார். ஆறு, ஏழு மாதங்களில் சொந்தமாக 'கிரி டிரேடிங் ஏஜென்ஸி' மாதுங்காவில் ஆரம்பிக்கப் பட்டது.

மும்பையில் பொன்விழா கண்டுவிட்ட 'கிரி டிரேடிங்கின்' சென்னை விஜயம் எப்பொழுது நடந்தது?

1976- ஆம் ஆண்டு சென்னை, மயிலாப்பூரில் தொடங்கப்பட்டது. மாதுங்காவில் தொடங்கப்பட்டு வெள்ளிவிழா கண்டுகொண்டிருந்த சமயத்தில், சென்னையிலிருந்து ஒவ்வொரு முறையும் புத்தகங் களை வரவழைப்பதைவிட, சென்னையிலேயே ஒரு நிறுவனத்தை தொடங்கி, தேவைக்கேற்ப புத்தகங் களை தயாரித்து விற்பனை செய்யலாமே என்று எண்ணி, ஆரம்பிக்கப்பட்டது.

சென்னையில் மயிலையில் மட்டுமே 'கிரி டிரேடிங்கை' பார்க்க முடிகிறது. பிற இடங் களில் உங்கள் நிறுவனத்தின் கிளைகளை படரவிடும் எண்ணம் இருக்கிறதா?

நிச்சயமாக.. வெகு விரைவில்...சென்னையின் 'Temple Town' என அழைக்கப்படும் நங்கை நல்லூரிலும், கோவையிலும் கிரி டிரேடிங் ஏஜென்ஸியை மக்கள் பார்க்கலாம்.

பக்தி மற்றும் ஆன்மீகம் என்றாலே நம் மக்கள் சட்டென 'கிரி டிரேடிங்' என்று சொல்லு மளவுக்கு வளர்ச்சிப் பெற்றிருக்கிறீர்கள்.. இந்த வெற்றின் ரகசியம் என்ன?

வெற்றியின் ரகசியம்.. team work தான். team என்பதன் விரிவாக்கமே together we achieve more தானே. திரு. கிரி அவர்களின் மகன்களும், மகள்களுமாக சேர்ந்து 9 பேருமாக தங்களது பள்ளிக்காலம் முதலே இந்நிறுவனத்தின் வளர்ச்சிக் காகப் பாடுபட்டிருக்கிறார்கள். சென்னையிலும், மும்பையிலும், இவர்களது மேற்பார்வையால் எங்கள் நிறுவனம் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது.

எல்லா நாட்களுமே இதேப் போல மக்கள் அலை இருக்குமா அல்லது ஏதாவது குறிப் பிட்ட seasion-ல மட்டும் அதிக அளவுல மக்கள் இங்க வருவாங்களா?

வரலக்ஷ்மி விரதத்திலிருந்து எங்கக்கட விழாக் கோலம் கொண்டு இருக்கிறோம். ஜூலை முதல் ஜனவரி மாதம் வரை எல்லா நாட்களுமே நாங்க பிஸியா தான் இருப்போம். பிப்ரவரியிலிருந்து ஜூன் மாதம் வரை கொஞ்சம் மக்கள் கூட்டம் கம்மியாக இருக்கும்.

'சபரி கிரி' ஏறுவதற்க்கு முன் மயிலை 'கிரி'யை ஒரு வலம் வரனும்னு ஐயப்ப பக்தர்கள் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்... அது எதனால்?

யாராவது சபரி மலைக்குப் போகணும்னு நினைச் சாங்கன்னா, அவங்களுக்க மலைக்குப் போவதற்கு தேவையான அத்தனையும் இங்கே கிடைக்கும். துளசி மாலையிலிருந்து, இருமுடி பை வரை எல்லாமே இங்கே கிடைக்கும். அதேப் போல எங்களது நிறுவனத்தின் படைப்பான கீதா காசெட்ஸ் வழங்கும் பல ஐயப்ப பக்திப்பாடல்கள் மற்றும் விரத ஸ்லோகங்கள் எங்களிடம் கிடைப்பதால், அப்படி சொல்றாங்க போலிருக்கு.
'கீதா காசெட்ஸின்' வெளியீடுகள் பற்றி?

இதுவரை 400க்கும் மேற்பட்ட காசெட்களை 'கீதா காசெட்ஸ்' வெளியிட்டிருக்கிறது. சங்கீதம் கற்க விரும்புவோர் கேட்டுக் கற்று பயன்படும் வகையில் சங்கீத பாலபாடம் குறித்த கேசட்டுகள் மற்றும் இதயநோய், இரத்த கொதிப்பு, உடல்வலி மற்றும் பல்வேறு உடல் உபாதைகளால் அல்லல் படுபவர் களுக்கு நிவாரணம் அளிக்கும் வண்ணம் விஞ்ஞான பூர்வமான 'மியூஸிக் தெரபி' அடங்கிய கேசெட்டுகள், பல புகழ்பெற்ற சங்கீத கலைஞர்களின் பாடல்கள் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இசை கலைஞர் களையும் ஊக்குவிக்கும் வண்ணம் புதிய காசேட்டுகள் கொண்டு வருகிறோம். எங்களது புதிய படைப்பு, மதுமிதா பாடிய பாடல்கள்.

இந்தியாவில் மட்டுமன்றி, அமெரிக்கா, சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள்கூட ''கிரி டிரேடிங்கை'' பற்றி நன்கு அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்களே?

ஆமாம்... வெளிநாடுகளில் உள்ள பல திருக் கோயில்களுக்கு கும்பாபிஷேக பொருட்கள், பஞ்சலோகசிலைகள், வெள்ளிக்கவசம் போன்றவை களை நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம். இதைத்தவிர, இன்டர்நெட் மூலம் உலகில் பல மூலையிலிருந்தும் எங்களிடம் பொருட்களை பல வாடிக்கையாளர்கள் வாடிக்கையாக ஆர்டர் செய்து வருகிறார்கள். அமெரிக்கா, ஜெர்மனியிலிருந்து நாங்கள் இதுவரை நேரில் பார்த்தறியாத பலர் புத்தகங்களையும், கேஸட்களையும் வாங்குகிறார்கள். வெளிநாட்டி லிருந்து சென்னைக்கு வரும் பலரது ''Travel plan-ல்'' கிரி டிரேடிங்கிற்கு வருவதும் ஒரு முக்கிய plan ஆக இருக்கிறது.

மாதுங்காவில் கிரி டிரேடிங் ஏஜென்ஸி 300 ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்டு, சென்னையிலும் தன் கிளையை துவக்கி, படிப்படியாக முன்னேறி, கீதா காசெட்ஸ் மூலமும், ''காமகோடி'' என்னும் தெய்வீக பண்பாடு மாத இதழ் வழியாகவும் பல கோடி இந்திய மக்களை ஒருங்கே இணைத்துக் கொண்டிருக்கும் சாதனையை செய்துக் கொண்டு இருக்கிறது.

Giri Trading Agency Pvt. Ltd.,
10, Kapaleeshwarer Sannadhi Street,
Mylapore, Chennai - 600 004
E-mail: giritrading@vsnl.com
Web: www.giritrading.com


நளினிசம்பத்குமார்
More

பத்மஸ்ரீ டாக்டர் சரோஜினி வரதப்பன்
Share: 
© Copyright 2020 Tamilonline