Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
சொற்கள் | பாட்டு |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
அக்பர் - பீர்பால் கதை
வேடனும் புறாக்களும்
- |ஏப்ரல் 2003|
Share:
The Doves And The Hunter
வேடனும் புறாக்களும்

A flock of doves flew from place to place in search of food. A crow also lived near the nest of these doves. It used to sit on a tree nearby, and watch the flight of the doves.One day, the crow saw a hunter setting a net for the doves, and scattering some corn.

உணவைத்தேடி சில புறாக்கள் கூட்டமாக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பறந்தன. இந்தப் புறாக்கள் வசித்த இடத்திற்குப் பக்கத்திலிருந்த காகம் மரக்கிளையின் மீது உட்கார்ந்து, இந்தப் புறாக்கள் பறப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தது.

ஒரு நாள் இந்தப் புறாக்களைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்து அதன் மீது தானியங்களைத் தூவி வைப்பதை அந்தக் காகம் பார்த்தது.

When the hunter had left, the doves swooped down to eat corn. They got caught in the net. Seeing the hunter returning, the crow, came to the doves and advised them: "All of you fly together at one time". They did so.

வேடன் அந்த இடத்தைவிட்டுப் போன பிறகு, அவன் தூவி வைத்த தானியங்களைச் சாப்பிட பறந்து வந்த புறாக்கள் வேடன் விரித்து வைத்த வலையில் மாட்டிக் கொண்டன. மாட்டிக் கொண்ட பறவைகளைத் தூக்கிச் செல்ல வேடன் வந்து கொண்டிருந்த போது, அந்தக் காகம் நடுவில் வந்து புறாக்களிடம், ''எல்லாரும் ஒரே நேரத்தில் சிறகை விரித்துப் பறக்கத் தயாராகுங்கள்'' என்று அறிவுரை சொன்னது.
The doves were now flying high in sky, carrying the net along with them! The hunter ran after them, but in vain!

காகம் சொன்னபடியே அத்தனை புறாக்களும் ஒரே நேரத்தில் பறக்கத் தோடங்கின. வேடன் விரித்த வலையையும் சேர்த்துத் தூக்கிக் கொண்டே அவை வானில் பறந்தன. புறாக்களைத் தூக்கிச் செல்ல வந்த வேடன் அவைகளின் பின்னாலேயே ஓடினான். இருந்தும் அவன் முயற்சி வீணாய்ப்போனது.

The crow was also flying, leading the flying doves. At last, all of them landed at the door of Mr. Rat. The crow said, "Now, Mr. Rat, you must help our friends. Please cut the net with your teeth and free them" Mr. Rat along with his brothers, cut the net neatly and freed the doves.

வலையைத் தூக்கிக் கொண்டு பறந்த புறாக்களை காகம் வழிநடத்திப் பறந்தது. முடிவில் எல்லாரும் எலியாரின் முன்னால் தரையிறங்கினார்கள். '' எலியாரே, நீங்கள்தான் இப்போது நம் நண்பர்களுக்கு உதவவேண்டும். தயவு செய்து அந்த வலையை உங்கள் பற்களால் கத்தரித்து அவர்களை விடுவியுங்கள்.'' என்று காகம் எலியிடம் கேட்டுக்கொண்டது. எலியும், தன் கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு வலையைக் கடித்து நீக்கி, புறாக்களை விடுவித்தது.
More

அக்பர் - பீர்பால் கதை
Share: 




© Copyright 2020 Tamilonline