|
முயலும் ஆமையும் |
|
- |மார்ச் 2003| |
|
|
|
The Hare And Tortoise
Once a hare boasted that he would run faster than the tortoise.
ஒருமுறை முயலுக்கும்-ஆமைக்கும் இருவரில் ''யார் வேகமாக ஓடுவார்கள்'' என்பதில் வாக்குவாதம் வந்தது. ''உன்னை விட நான்தான் வேகமாக ஓடுவேன்' என்றது முயல்.
They made a bet and started the race. The hare ran fast first.
இரண்டுபேரும் பந்தயம் கட்டி ஓடத் தொடங்கினார்கள். முயல் மிக வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றதும் முயல் பின்னால் திரும்பிப் பார்த்தது. ஆமை கண்ணுக்கெட்டாத தூரத்தில் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தது.
Seeing the tortoise far behind, the hare took a sleep.
ஆமை பக்கத்தில் வருவதற்குள், ஒரு குட்டித் தூக்கம் போடலா மென்று அந்த இடத்தில் படுத்த முயல் நன்றாக தூங்கிப் போனது. |
|
The Tortoise walked along and reached the winning post first. The Tortoise won the race.
சிறிது நேரம் கழித்து முயல் கண்விழித்து ஆமையைத் தேடியது. ஆமையோ பந்தயத்தின் எல்லைக் கோட்டை நெருங்கி விட்டது. தூக்கம் கலைந்த முயல் ஓடி வருவதற்குள், ஆமை எல்லையைத் தாண்டி பந்தயத்தில் ஜெயித்து விட்டது.
நிறுத்தி-நிதானமாக எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றி பெறலாம்.
Moral: Slow and steady wins the race. |
|
|
|
|
|
|
|