நவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு வகைகள் தேங்காய் பர்ஃபி சாக்கலேட் பர்ஃபி வேர்க்கடலை உருண்டை பொரிகடலை மாவு உருண்டை
|
|
|
பாசிப் பயறையும் வெள்ளை அல்லது சிவப்பு காராமணியையும் இதற்கு உபயோகிக்கலாம்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த பயறு - 2 கிண்ணம் கடுகு - 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி வெல்லம் பொடி செய்தது - 1 மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி ஏலக்காய்த் தூள் - சிறிதளவு உப்பு - தேவையானால் சிறிதளவு |
|
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும், உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமான பின்பு வெல்லப்பொடி சேர்த்து ஒன்று சேர சில நிமிடங்கள் கிளறவும். வெல்லம் சிறிது நெகிழ்ந்து பின்னர் இறுகிவிடும். பிறகு வெந்த பயறையும் போட்டு மென்மையாகக் கலக்கவும்.
தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி ஏலக்காய்த் தூள் சேர்த்துப் பின்னர் இறக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு வகைகள் தேங்காய் பர்ஃபி சாக்கலேட் பர்ஃபி வேர்க்கடலை உருண்டை பொரிகடலை மாவு உருண்டை
|
|
|
|
|
|
|