அதிரசம் பாஸந்தி மைசூர்ப்பாகு பாதாம் அல்வா தீபாவளி மருந்து முறுக்கு பொட்டுக்கடலை (பொரிகடலை) முறுக்கு பருப்பு முறுக்கு ஓமப்பொடி காரா பூந்தி கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸ்சர்
|
|
|
லட்டு
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 கிண்ணம் அரிசி மாவு - 2 தேக்கரண்டி உப்பு - 1 சிட்டிகை சர்க்கரை - கிண்ணம் பொரிப்பதற்கு தேவையான சமையல் எண்ணெய் (Corn oil) நெய்யில் வறுத்து ஒடித்த முந்திரி பருப்பு - 1 கிண்ணம் நெய்யில் வறுத்த உலர்ந்த கருப்பு திராட்சை (raisins) - 1/4 கிண்ணம் ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி டைமண்ட் கல்கண்டு - 1/8 கிண்ணம் (இந்தியன் கடைகளில் கிடைக்கும்) கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை |
|
செய்முறை
சர்க்கரைப் பாகு வைக்க: அடி கனமான வாணலியில் சர்க்கரையுடன் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஐந்து நிமிடங்கள் கொதித்த பின்பு, அதாவது கம்பிப் பதம் வந்த பின்பு கேசரிப் பவுடர் சேர்த்து கலக்கி இறக்கவும்.
பூந்தி செய்ய: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காயவிடவும். பூந்தி செய்யும் தட்டை, வாணலியின் காய்ந்த எண்ணெய் மேல் சற்று உயர இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால், கரைத்த மாவில் ஒரு கரண்டி விட்டு, கரண்டியின் அடியால் நன்கு தேய்க்கவும்.
பூந்தி முத்துக்கள் விழுந்து முடித்ததும், பூந்தி முத்துக்களை இரண்டு பக்கமும் வேகவிட்டு ஒரு வடிகட்டியில் வடியவைக்கவும். பூந்தி முத்துக்களை பதமாக வேகவிடவும். ரொம்ப கரகரப்பாக இருக்கக்கூடாது.
லட்டு பிடிக்கும் முறை : எண்ணெய் வடிக்கப்பட்ட பூந்திகளை இளம் சூடாக உள்ள சர்க்கரைப் பாகில் போட்டுக் கலக்கவும். நெய்யில் வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்பு, உலர்ந்த கருப்பு திராட்சை, ஏலக்காய்ப் பொடி, டைமண்ட் கல்கண்டு எல்லாவற்றையும் போட்டுக் கலந்து, கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக உருட்டவும். சூடு ஆறிய பின்பு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
அதிரசம் பாஸந்தி மைசூர்ப்பாகு பாதாம் அல்வா தீபாவளி மருந்து முறுக்கு பொட்டுக்கடலை (பொரிகடலை) முறுக்கு பருப்பு முறுக்கு ஓமப்பொடி காரா பூந்தி கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸ்சர்
|
|
|
|
|
|
|