வெற்றிக் கொடி நாட்டும் தனுஷ் மறுபடியும் சண்டியருக்குத் தடை ஜேபாலாவின் சுவடுகள் ஹிந்திக்கு செல்கிறது 'காக்க காக்க'
|
|
தயாரிப்பாளராகிறார் பிரகாஷ்ராஜ் |
|
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2003| |
|
|
|
நடிகர் பிரகாஷ்ராஜ் 'நாம்' என்ற திரைப்படத்தை 25 நாட்களில் முடித்து அசத்தியிருக்கிறார். இந்தியாவில் இருக்கின்ற 56 கோடி இளைஞர்களின் கனவுதான் 'நாம்' என்கிறார் பிரகாஷ்ராஜ்.
படத்தைக் குறுகிய காலத்திற்குள் எடுத்து முடித்தது தனக்கே ஆச்சர்யமளிக்கிறது என்று கூறும் இவர் இப்படத்திற்காக அதிக அளவில் பணத்தைச் செலவழித்திருப்பதாக கூறுகிறார்.
இப்படத்தில் முதல்முதலாக எச்டி என்ற பிலிம் இல்லாத காமிராவை பயன்படுத்திருக்கிறார்கள் என்பது ஒரு சிறப்பம்சம். இளைஞர்களுக்கான படம் 'நாம்'. நான்கு இளைஞர்கள் ஒரு பெண் சேர்ந்தால் காதல் என்று நாம் நினைத்தால் தவறு. இந்தப் படத்தில் காதல் இல்லை என்கிறார் பிரகாஷ்ராஜ்.
இந்தப் படம் எடுத்துமுடித்த கையோடு மற்றொரு படத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். 'எல்லாமே டிராமாதான்' படத்தின் தலைப்பு. இந்த படத்திற்கு தரணி உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராதாமோகன்தான் இயக்குனர். |
|
லட்சியத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் இளைஞனுக்கும், முற்போக்கு எண்ணங்கள் கொண்ட ஓர் இளம்பெண்ணுக்கும் ஏற்படும் நட்பு கலந்த உறவுதான் 'எல்லாமே டிராமாதான்' படத்தின் கதை.
பிரகாஷ்ராஜின் முயற்சிக்குப் பலன் உண்டா?
கேடிஸ்ரீ |
|
|
More
வெற்றிக் கொடி நாட்டும் தனுஷ் மறுபடியும் சண்டியருக்குத் தடை ஜேபாலாவின் சுவடுகள் ஹிந்திக்கு செல்கிறது 'காக்க காக்க'
|
|
|
|
|
|
|