சுவையான காளான் தயாரிப்புகள் காளான் சலாட் காளான், பட்டாணி பிரியாணி காளான் பக்கோடா
|
|
|
தேவையான பொருட்கள்
காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 பூண்டு - 6 பல் இஞ்சி - சிறு துண்டு தக்காளி - 2 மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி சோம்பு - 1/8 தேக்கரண்டி சீரகத்தூள் - - 1/8 தேக்கரண்டி பால் - 1 கிண்ணம் நெய் - 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
காளானை நன்கு கழுவி, பாதியாக நறுக்கிக் கொள்ளவும். பாதி அளவு வெங்காயத்தை, இஞ்சி, பூண்டு, சோம்புடன் சேர்த்து அரைக்கவும். தக்காளியை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வதங்கியபின், தக்காளியைப் போட்டு வதக்கவும். பின் அரைத்த வெங்காயக் கலவையைப் போட்டுச் சிவப்பாக வதக்கவும். பின் அரைத்த தக்காளியைப் போட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
பின்னர் உப்பு, மிளகாய்த் தூள், சீரகத் தூள் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். பால் சேர்த்து. நறுக்கிய காளானையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
இதை ஃப்ரைடு ரைஸ், நெய்ச்சோறு (ghee rice), சப்பாத்தி, பிரியாணி ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
மீனாக்ஷி கணபதி |
|
|
More
சுவையான காளான் தயாரிப்புகள் காளான் சலாட் காளான், பட்டாணி பிரியாணி காளான் பக்கோடா
|
|
|
|
|
|
|