Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா? புரியுமா? | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
தேன்தமிழ் இசையில் தேவியின் பெருமை
கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் ராக வித்யா
மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் தசரா/தீபாவளி திருவிழா
நந்தலாலா இயக்கத்தின் இளையோர் கச்சேரி
சிகாகோவில் 'பரதம் கலைக்கூடம்' ஆண்டுவிழா
சிகாகோவில் கிரேசி மோகன்
கனெக்டிகட்டில் தீபாவளி விழா
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டு மையம்
சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் குழந்தைகள் நிகழ்ச்சி
அட்லாண்டாவில் கிரிக்கெட் மூலம் வளர்ச்சி நிதி
- |டிசம்பர் 2004|
Share:
Click Here Enlarge'மார்ட்டின்ஸ் மேனியாக்ஸ்', 'ஜிடி ப்ளேபாய்ஸ்', 'ஆல்·பரெட்டா மான்ஸ்டர்ஸ்' - இவையெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா? அக்டோபர் 23, 2004 அன்று அட்லாண்டாவில் நடந்த இந்திய மேம்பாட்டுக் கழகத்தின் (Association for India's Development - AID) கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த சில குழுக்களின் பெயர்கள்தாம் இவை. இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்திவரும் இக்கழகம் நிதி திரட்டுமுகமாக இப்போட்டி களை நடத்துவது இது மூன்றாவது வருடம். இந்தச் சீரிய முயற்சியில் அட்லாண்டா கிரிக்கெட் சங்கமும் இணைந்து செயல்பட்டது.

தலா எட்டு வீரர்களைக் கொண்ட 30 அணிகள் கொண்ட போட்டித் தொடர் இரண்டு நாட்களாக நடந்தது. ஒவ்வொரு ஆட்டமும் 8 ஓவர்களையே கொண்டதுதான் என்றாலும் உற்சாகத்துக்கும், பார்வையாள ரின் பரபரப்புக்கும் குறைவில்லை. ஒரு பெண் கிரிக்கெட் வீரரும் பங்குபெற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

ஜிடி ப்ளேபாய்ஸ் முதல் இடத்தைக் கைப்பற்ற, ஆல்·பரெட்டா மான்ஸ்டெர்ஸ் அடுத்த இடம் பெற்றனர். ஜிடியின் விஜய் நாராயணன் தொடர் மற்றும் இறுதி ஆட்டத்தின் சிறந்த ஆட்டக்காரராகவும், சிறந்த பந்துவீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். நிமிர் (ப்ளேபாய்ஸ்) சிறந்த மட்டையாளர், ஷியாம் ரீலே (ஆல்·பரெட்டா) மற்றும் ஹம்மட் (சப்ரி ·பால்கன்ஸ்) சிறந்த களவீரர் விருதுகளைப் பெற்றனர்.
Click Here Enlargeமதறாஸ் சரவணபவன், எம்.ஜே. டிராவல்ஸ், கிரிஸ்பி டிராவல்ஸ், குளோபல் மால், ஏன்டிஸ் இன்டியன் கிரில், சிங் கொரியர் சர்வீஸ், பூனா ரெஸ்டரான்ட் மற்றும் ரியால்டோ சென்டர் ·பார் தி பெர்·பார்மிங் ஆர்ட்ஸ் ஆகியோரின் ஆதரவு இந்நிகழ்ச்சியின் பெரும்பலம்.

1991-இல் இலாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பாகத் தோன்றிய AID, இந்தியாவில் சமநோக்குடன் கூடிய பணிகளைக் கல்வி, வாழ்பொருள், இயற்கை வளங்கள், உடல் நலம், மகளிர் சக்தியூட்டல், சமுதாய நீதி ஆகிய துறைகளில் ஆற்றிவருகிறது. இவ்வமைப்பின் பணிகள் குறித்து மேலும் அறிய: http://www.aidindia.org/atlanta/projects.shtml http://www.atlanta.aidindia.org/
More

தேன்தமிழ் இசையில் தேவியின் பெருமை
கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் ராக வித்யா
மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் தசரா/தீபாவளி திருவிழா
நந்தலாலா இயக்கத்தின் இளையோர் கச்சேரி
சிகாகோவில் 'பரதம் கலைக்கூடம்' ஆண்டுவிழா
சிகாகோவில் கிரேசி மோகன்
கனெக்டிகட்டில் தீபாவளி விழா
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டு மையம்
சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் குழந்தைகள் நிகழ்ச்சி
Share: 




© Copyright 2020 Tamilonline