'மார்ட்டின்ஸ் மேனியாக்ஸ்', 'ஜிடி ப்ளேபாய்ஸ்', 'ஆல்·பரெட்டா மான்ஸ்டர்ஸ்' - இவையெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா? அக்டோபர் 23, 2004 அன்று அட்லாண்டாவில் நடந்த இந்திய மேம்பாட்டுக் கழகத்தின் (Association for India's Development - AID) கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த சில குழுக்களின் பெயர்கள்தாம் இவை. இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்திவரும் இக்கழகம் நிதி திரட்டுமுகமாக இப்போட்டி களை நடத்துவது இது மூன்றாவது வருடம். இந்தச் சீரிய முயற்சியில் அட்லாண்டா கிரிக்கெட் சங்கமும் இணைந்து செயல்பட்டது.
தலா எட்டு வீரர்களைக் கொண்ட 30 அணிகள் கொண்ட போட்டித் தொடர் இரண்டு நாட்களாக நடந்தது. ஒவ்வொரு ஆட்டமும் 8 ஓவர்களையே கொண்டதுதான் என்றாலும் உற்சாகத்துக்கும், பார்வையாள ரின் பரபரப்புக்கும் குறைவில்லை. ஒரு பெண் கிரிக்கெட் வீரரும் பங்குபெற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
ஜிடி ப்ளேபாய்ஸ் முதல் இடத்தைக் கைப்பற்ற, ஆல்·பரெட்டா மான்ஸ்டெர்ஸ் அடுத்த இடம் பெற்றனர். ஜிடியின் விஜய் நாராயணன் தொடர் மற்றும் இறுதி ஆட்டத்தின் சிறந்த ஆட்டக்காரராகவும், சிறந்த பந்துவீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். நிமிர் (ப்ளேபாய்ஸ்) சிறந்த மட்டையாளர், ஷியாம் ரீலே (ஆல்·பரெட்டா) மற்றும் ஹம்மட் (சப்ரி ·பால்கன்ஸ்) சிறந்த களவீரர் விருதுகளைப் பெற்றனர்.
மதறாஸ் சரவணபவன், எம்.ஜே. டிராவல்ஸ், கிரிஸ்பி டிராவல்ஸ், குளோபல் மால், ஏன்டிஸ் இன்டியன் கிரில், சிங் கொரியர் சர்வீஸ், பூனா ரெஸ்டரான்ட் மற்றும் ரியால்டோ சென்டர் ·பார் தி பெர்·பார்மிங் ஆர்ட்ஸ் ஆகியோரின் ஆதரவு இந்நிகழ்ச்சியின் பெரும்பலம்.
1991-இல் இலாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பாகத் தோன்றிய AID, இந்தியாவில் சமநோக்குடன் கூடிய பணிகளைக் கல்வி, வாழ்பொருள், இயற்கை வளங்கள், உடல் நலம், மகளிர் சக்தியூட்டல், சமுதாய நீதி ஆகிய துறைகளில் ஆற்றிவருகிறது. இவ்வமைப்பின் பணிகள் குறித்து மேலும் அறிய: http://www.aidindia.org/atlanta/projects.shtml http://www.atlanta.aidindia.org/ |