விடைகள்1. எண்களின் வரிசையில் முதல் எண்ணுக்கும் அடுத்த எண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 19, 20 என ஏறுவரிசையில் உள்ளது.
அதன்படி அடுத்து வர வேண்டிய எண்கள் = 50 + 21 = 71; 71 + 22 = 93 ஆகும்.
2. இயலும்
33 + 3 + 3/3 = 37
333/3*3 = 37
3. முடியும். மேற்கண்ட எண்களைப் போன்ற மூன்று இலக்க எண்களை, 999 உடன் பெருக்கி வெகு விரைவாக விடைகாண இயலும்.
அதற்கான வழிமுறைகள்:
1. முதலில் 999ல் பெருக்கப்பட வேண்டிய எண்ணிலிருந்து, எண் 1-ஐக் கழித்து எழுதிக்கொள்ள வேண்டும்.
2. தொடர்ந்து, பெருக்கப்பட வேண்டிய எண்ணை ஆயிரத்திலிருந்து கழித்து வரும் விடையை அடுத்து எழுதிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
சான்றாக, 315 x 999 என்றால் முதலில் 315லிருந்து எண் 1ஐக் கழிக்க வரும் விடையை முதலாவதாக எழுதிக் கொள்ள வேண்டும். (314) அடுத்து 315ஐ, ஆயிரத்திலிருந்து கழிக்க வரும் எண்ணை அடுத்து எழுதிக்கொள்ள வேண்டும். (685) அவ்வளவே.
315 x 999 = 314685 (315-1= 314; 1000-315 = 685)
899 x 999 = 898101 (899-1=898; 1000-899 = 101)
எண் 999ஐ, 1000த்தில் இருந்து கழிக்கும்போது மட்டும் விடை ஒன்றுக்கு முன் இரண்டு பூஜ்யங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
999 x 999 = 998001
4. அந்த எண்கள் 36 மற்றும் 63
36 = 3 + 6 = 9
9 x 4 = 36;
36ன் தலை கீழ் எண் = 63
63 = 6 + 3 = 9
9 x 7 = 63.
ஆகவே, அந்த எண்கள் = 36, 63.
5. நுற்று நாற்பதுக்கு மேற்பட்ட பகா எண்கள், வரிசையாக, கூட்டுத்தொகை 620 வர வேண்டும் என்றால் அவ்வெண்கள் = 149 + 151 + 157 + 163 = 620.